The Indian Times

கவின் விஷயத்துல இதுதான் நடந்துச்சு..கவின் பற்றி உண்மையை சொன்ன லாஸ்லியா | Kavin | Losliya

இலங்கையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்தான் லாஸ்லியா மரியநேசன். இவரது அழகான தமிழ் உச்சரிப்பும், அழகு தமிழில் இவரது பேச்சு நடையும் இவரை பிக்பாஸ் என்னும் பிரபல நிகழச்சிக்கு வரவழைத்தது. படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்தவர்களும், இனமேல் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பவர்கள் என பிரபலங்களை மட்டுமே அழைத்து நிகழ்ச்சி நடத்தும் பிக்பாஸ் ஷோ, லாஸ்லியா போன்ற தமிழ் மக்களுக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாதவர்களை அழைத்து வந்து அவரை பிரபலமாக்கியுள்ளது. இன்று லாஸ்லியா இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவருடன் பிக்பாஸில் பயணித்த தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் நடித்துள்ளார்.

Advertisement

இவர் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் ஒருவர். இறுதி 4 போட்டியாளர்களுள் ஒருவராக வந்தார். இவர் பிக்பாஸில் இருந்தபோது கவினும் இவரும் காதலிப்பதாக காட்சிப்படுத்தப்பட்டது. லாஸ்லியாவின் அப்பா உள்ளே வந்தபோது கவினுடனான காதலைப் பற்றி லாஸ்லியாவை திட்டித் தீர்த்தார். தன்னால் வெளியில் தலை காட்டமுடியவில்லை என்றும் அவரை திட்டினார். அந்த வீடியோ அப்போது சமூக வலைத்தளங்களில் மிக வைரலானது. தற்போது லாஸ்லியா மற்றும் கவின் இருவரும் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகின்றனர். Youtube Video Code Embed Credits: Cineulagam

Advertisement

பிக்பாஸ் முடிந்து வெளியே வந்த பிறகு கவின் மற்றும் லாஸ்லியா காதல் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. இருவரும் அது பற்றி ஒரு முறை கூட பேசியதே இல்லை. தற்போது லாஸ்லியா குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுடன் இணைந்து ஆல்பம் சாங் ஒன்றில் நடித்து வருகிறார். அதன் ப்ரோமோஷன்க்காக பல பேட்டிகள் அளித்து வருகிறார். அப்போது கவின் பற்றி லாஸ்லியாவிடம் கேட்ட போது கவின்க்கும் எனக்கும் செட் ஆகவில்லை என்றும். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது வேறு வழியில்லை என்றும் ஆனால் வெளியில் வந்து பார்க்கும் போது நிலைமை வேறு மாதிரியாக இருந்ததாகவும் அவர் கூறினார். அதனால் நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம் என்றும் அவர் கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in