The Indian Times

மகன் குட்டி சஞ்சீவை வரவேற்க புது கார் வாங்கிய சஞ்சீவ், ஆல்யா..என்ன கார் வாங்கிருக்காங்க? | Alya Manasa | Sanjeev

ஆல்யா மானசா – சஞ்சீவ் தம்பதிக்கு தற்போது இரண்டாவதாக ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தை பிறந்தால் அர்ஷ் என்றும், பெண் குழந்தை பிறந்தால் லைலா எனவும் பெயர் வைக்க உள்ளதாக ஏற்கனவே திட்டமிட்டு இருந்தனர். தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதால், அர்ஷ் பிறந்துவிட்டான் என்று நேற்று இன்ஸ்டாகிராமில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருந்தார் சஞ்சீவ். சஞ்சீவ்-ஆல்யா ரசிகர்களும் வாழ்த்து மழையை பொழிந்ததால், “உங்கள் அன்புக்கு மிக்க நன்றி” மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இருவரும் நன்றி தெரிவித்து இருந்தனர். விஜய் டிவி சீரியலில் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா. தொடரில் நடித்து கொண்டிருந்தபோதே இவர்களுக்குள் காதல் மலர இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

இசுலாமிய குடும்பத்தை சேர்ந்த ஆல்யா, சஞ்சீவை திருமணம் செய்து அவர்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்க,தடைகளையெல்லாம் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் ஐலாவிற்கு இரண்டு வயது பூர்த்தியானதையும், ஆல்யாவின் இரண்டாவது வளைகாப்பு நிகழ்ச்சியையும் மிக பிரம்மாண்டமாக நடத்தினார் சஞ்சீவ். அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் அதே மேடையில் ஐலா பாப்பாவின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். ஐலா பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் குழந்தை. பொம்மை போல் இருக்கும் அந்த குட்டீஸ் ஓடி விளையாடுவது பார்க்கவே மிக அழகாக இருக்கும். அந்த வீடியோக்களை சஞ்சீவ் தனது யூடியூப் பக்கங்களில் பதிவேற்றினால் பார்வையாளர்களை அள்ளும். அந்த அளவிற்கு பிரபலமாகிவிட்டார் ஐலா. Youtube Vide Code Embed Credits: Galatta Tamil

Advertisement

தற்போது ஐலாவிற்கு தம்பி பாப்பா பிறந்துவிட்டான். ஐலா பிறந்தபோது அவரை வரவேற்க அப்பா சஞ்சீங் வெள்ளை நிற பென்ஸ் கார் வாங்கினார். இப்போது மகன் அர்ஸை வரவேற்க சஞ்சீவ் புது கார் ஒன்றை வாங்கியுள்ளார். கறுப்பு நிற பென்ஸ் காரை சஞ்சீவும்,ஆல்யாவும் இணைந்து வாங்கியுள்ளனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். அதில் எங்கள் குடும்பம் இளவரசி ஐலா மற்றும் புதிய இளவரசர் அர்ஷ் வருகையால் பூர்த்தியாகிவிட்டது என்றும் தன் மனைவிக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார் சஞ்சீவ். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the video below..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in