The Indian Times

என் காதலை ஏத்துக்கோ பாவனி….BB JODIGAL மேடையில் PROPOSE செய்த அமீர்

விஜய் தொலைக்காட்சி ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் டிவி.இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை மக்களுக்கு நிரூபித்தனர்.அதன்படி முதல் சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் வென்றனர்.இந்நிலையில் முதல் சீசனில் மக்கள் அளித்த வரவேற்பை கண்டு இரண்டாவது சீசனை தொடங்கியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அசத்தல் நடனம் ஆடி வருகின்றனர்.அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பெரிதும் பேசப்பட்ட போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி நடனம் ஆடி வருகின்றனர்.வாரம் வாரம் போட்டியாளர்களுக்கு இடையே போட்டி கடுமையாகி கொண்டு வருகிறது.

இந்த வாரம் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.இந்த வார நிகழ்ச்சியில் அமீர் வழக்கம் போல் பாவனியுடன் நடனத்தில் வெளுத்து வாங்கியுள்ளார்.நடனம் முடிந்த பின்னர் பாவனிக்கு பல சர்ப்ரைஸ்களை கொடுத்து மோதிரம் கொடுத்து மண்டியிட்டு தனது காதலை தெரிவித்துள்ளார்.அவர் மோதிரத்தினை வாங்க பலரும் கூறி வரும் நிலையில் அவர் வாங்குகிறாரா இல்லையா என்பது தெரியவில்லை,இந்த ப்ரோமோ நமக்கே பாவனி வாங்கி இருப்பாரா இல்லையா என பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது.மேலும் ரசிகர்களிடமும் இந்த ப்ரோமோ நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed video credits : VIJAY TELEVISION 

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in