The Indian Times

ஆஸ்திரேலியால ஆந்தை மேய்ச்சிட்டு இருந்தான்…அதிர்ச்சி அருணை மரணத்தனமாக கலாய்த்த குரேஷி…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பல பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் அதில் பலர் வெளியேறி இறுதியாக அம்மு அபிராமி,தர்ஷன்,ஸ்ருத்திகா, வித்யூலேகா மற்றும் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் இணைந்துள்ளனர்.இவர்களுக்கிடையே தற்போது போட்டி பலமாக நடந்துகொண்டு வருகிறது.இன்னும் வைல்ட் கார்டில் இருந்து சென்ற குக்குகள் மீண்டும் வந்தால் அதகளம் தான் அந்த அளவிற்கு ஒருவருக்கொருவர் போட்டி போட்டு சமையல் செய்து வருகின்றனர்.சமையல் மட்டும் இல்லாமல் கோமாளிகள் இணைந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் காமெடி கலவரம் செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களுக்கு நேரடியாக இறுதி சுற்றில் செல்லும் வைல்ட் கார்டு போட்டி நடத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியிலும் கோமாளிகள் கலக்கலான கெட்டப்புகளில் வந்து மக்களை சிரிக்க வைத்துள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் கோமாளிகள் இரட்டை இரட்டையாக வந்து அசதியுள்ளனர்.அந்த வரிசையில் பவர் ஸ்டார் கெட்டப்பில் குரேஷியும்,சூப்பர் ஸ்டார் கெட்டப்பில் அதிர்ச்சி அருணும் வந்துள்ளனர்.ரோஷினிக்கு ஜோடியாக இவர்கள் என்ட்ரியில் அதிர்ச்சி அருண் பேச வர,உடனே குரேஷி இவர் தான் ஆஸ்திரேலியாவில் ஆந்தை மேய்ச்சிட்டு இருந்தாரு என பல கவுண்டர்களை அடுத்தடுத்து போட்டு அரங்கத்தினையும் மக்களையும் சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளார்.தற்போது இந்த நிகழ்ச்சி தொகுப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.

https://youtu.be/8zY5b2zFfxU

Embed video credits : Vijay Television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in