The Indian Times

பிரபல நிகழ்ச்சியில் சமந்தாவை தூக்கி கொண்டு வந்த அக்ஷய் குமார்..நீங்க எப்படி தூக்கலாம் கடுப்பாகிய சமந்தா ரசிகர்கள்

விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் படத்தில் சிறிய தோற்றத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.மேலும் பாலிவுட்டிலும் நடிகை சமந்தா களம் இறங்கியுள்ளதால் சினிமா உலகில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது.அதர்வாவுக்கு ஜோடியாக பாணாகாத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் இவருக்கு அமைந்தன.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி அனைவரது மனத்தினையும் கொள்ளை கொண்டார் சமந்தா.தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு இவர் கதாநாயகியாக நடித்துவிட்டார் .தற்போது விஜய் தேவர்கொண்டாவின் புதிய படமான குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.அண்மையில் தமிழில் இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகியது.இப்படத்தில் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.இவருக்கும் இவரது முன்னாள் கணவர் ஆன நாக சைதன்யாவிற்கு அக்டொபர் 2,2021ல் விவாகரத்து ஆகியது.

பாலிவுட்டில் பிரபலமான நிகழ்ச்சி காபி வித் கரண் ,பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோகர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் ஜூலை 7 ஆம் தேதி தொடங்க உள்ளது.டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நிகழ்ச்சி வெளியாக உள்ளது.இந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்துகொண்டுள்ளார்,இந்த நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் சமந்தா ஆகியோ பங்குபெற்றுள்ளனர்.இந்நிலையில் நடிகர் அக்ஷய் குமார் சமந்தாவை தூக்கிக்கொண்டு வந்துள்ளார்.இந்த நிகழ்ச்சி ப்ரோமோ வைரலாகியதை தொடர்ந்து அக்ஷய் குமார் மீது சமந்தா ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்

Embed video credits : Disney plus hotstar

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in