The Indian Times

விக்னேஷ் சிவன், நயன்தாராவை கைது பண்ணுங்க! புகார் கொடுத்த சமூக ஆர்வலர் | Nayanthara | Vignesh Shivan

தமிழ் திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. கேரளாவில் பிறந்து வளர்ந்த இவரின் இயற்பெயர் டயானா குரியன். ஆரம்பத்தில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் தனது கடுமையான உழைப்பாலும், திறமையாலும் படிப்படியாக உயர்ந்து இன்று தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார். 2005ம் ஆண்டு வெளியான ஐயா என்னும் படம் மூலம் அறிமுகமானார். இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது அவரை கைது செய்ய வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவருக்கும், விக்னேஷ் சிவன் இயக்குநருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் அடிக்கடி கோவில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். சமீபத்தில் கூட இருவரும் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்றதும், அங்கே சென்னை மேயர் பிரியாவை சந்தித்ததும் வைரலானது. இப்படி இருக்கையில் இவர்கள் இருவரும் இணைந்து “ரவுடி பிக்சர்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த பெயருக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னை சாலி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்ற சமூக ஆர்வலர் காவல் துறையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவர் மீதும் புகார் ஒன்றை அளித்துள்ளார். Youtube Video Code Embed Credits: IndiaGlitz

Advertisement

அதில் ரவுடிகளையும், ரவுடிசத்தையும் ஒடுக்க காவல்துறையும், அரசும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் சேர்ந்து தொடங்கிய தயாரிப்பு நிறுவனத்திற்கு “ரவுடி பிக்சர்ஸ்” என பெயர் வைத்திருப்பது ரவுடிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் உள்ளது என்றும், எனவே இந்த தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்களான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கண்ணன் புகார் அளித்துள்ளார். அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in