தவழ்ந்து வந்த முதியவர்..வேகமாக வந்த டி.ஆர் கார் ஏறியதால் பலியான சோகம் | T.Rajendar

விளம்பரம்
விளம்பரம்

பிரபல நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் அவர்களின் கார் ஏறி இறங்கியதில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். காலில் அடிபட்டதால் சாலையை கடக்க முடியாமல் தவழ்ந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது டி.ராஜேந்தரின் கார் ஏறி இறங்கியதில் அவர் படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனிளிக்காமல் அவர் இன்று உயிரிழந்துள்ளார். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர் 58 வயது முனிசாமி என்றும் காவாலாளியாக பணிபுரிந்து வந்தார் என்றும், காலில் அடிபட்டதால் தரையில் ஊர்ந்து வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  சிவாஜியாகவே வாழும் சிவாஜி ரசிகர்..அச்சு அசல் இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியம்

தவழ்ந்து வந்த முதியவர்..வேகமாக வந்த டி.ஆர் கார் ஏறியதால் பலியான சோகம் | T.Rajendar 1

விளம்பரம்

கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது பேரக் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் குடும்பத்துடன் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை தேனாம் பேட்டை இளங்கோ சாலையில் அருகே சாலையில் ஒருவர் காலில் அடிபட்டு இருந்தால் நடக்க முடியாமல் தவழ்ந்து சாலையை கடந்து கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்து திரும்பிய டி.ராஜேந்தர் அவர்களின் கார் அவர் மீது ஏறி இறங்கியது. இதனால் படுகாயமடைந்தார் அவர். உடனடியாக காரை விட்டு இறங்கிய டி.ராஜேந்தர் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். எனினும் அந்த நபர் சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தார். Youtube Video Code Embed Credits: Polimer News

தவழ்ந்து வந்த முதியவர்..வேகமாக வந்த டி.ஆர் கார் ஏறியதால் பலியான சோகம் | T.Rajendar 2

விளம்பரம்

இதையடுத்து காரை ஓட்டி வந்த ராஜேந்திரன் கார் ஓட்டுநர் செல்வம் தாமாக முன் வந்து சரண்டைந்துள்ளார். அவரை கைது செய்த பாண்டிபஜார் காவல்துறை அவர் மீது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் போது டி.ராஜேந்தர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் காரில் இருந்ததாக கூறப்படுகிறது. இறந்தவரின் உடல் இன்றுதான் அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டி.ஆர் கார் மோதி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

கட்டாயம் படிக்கவும்  சிவாஜியாகவே வாழும் சிவாஜி ரசிகர்..அச்சு அசல் இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment