The Indian Times

ஐயா படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை இவர்தான்! பல வருடங்கள் கழித்து வெளிவந்த தகவல்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியா நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. ஐயா படத்தில் ஆரம்பித்து இன்று வரை தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் நயன்தாரா.

தமிழ் திரையுலகில் இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக சினிமாவில் ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் தான் கதைகள் அமையும், ஆனால் நயன்தாரா நடித்தால் அந்த படத்தில் ஹீரோவே இல்லை என்றாலும் படம் சூப்பர் ஹிட் ஆகும்.

Advertisement

அப்படி பட்ட பெரியளவில் ரசிகர்களை வைத்துள்ளார் லேடி சூப்பர்ஸ்டார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட நாட்களாக காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும்.

விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் , தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இன்று இவர் தமிழ் சினிமாவின் ஸ்லிம்மான ஸ்டைலிஷ் ஆனா லேடி சூப்பர்ஸ்டாராக இருந்தாலும், ஆரம்பகாலத்தில் இவர் தோற்றத்தை பலர் விமர்சித்துள்ளனர்.

அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானது ஐயா படத்தின் மூலமாக தான். 2005 ஆம் ஆண்டு சரத் குமார், நெப்போலியன் ஆகியோர் நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படம் ஐயா.

இந்த படம் தான் நயன்தாரா தமிழில் கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை மலையாள நடிகை நவ்யா நாயர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in