The Indian Times

Cable Car-ல் பேபி நீ சுகருமா பாடலுக்கு Step போட்ட CWC ASHWIN

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் அஸ்வின்.இவர் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பல வெப் சீரிஸ் மற்றும் படங்களிலும் துணை நடிகராக நடித்து வந்தார்.பட வாய்ப்பு தேடி வந்த அவருக்கு இறுதியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.விஜய் தொலைக்காட்சியில் முகம் ஒரு நிமிடம் தெரிந்தாலே பிரபலம் ஆகிவிடலாம் என அனைவருக்கும் தெரியும்போது அது அஸ்வினுக்கு மட்டும் தெரியாதா என்ன.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது முழு திறமையும் காட்டினார்.இந்த நிகழ்ச்சி மூலம் நல்ல வரவேற்பு இவருக்கு கிடைத்தது.இதனை தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை.இந்நிலையில் நடிகர் விக்ரம் பிரபுவை அறிமுகப்படுத்திய பிரபு சாலமன் இயக்கத்தில் தற்போது செம்பி எனும் புதிய படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினை ட்ரிடென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தின் ட்ரைலெர் இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகை லாஸ்லியா உடன் இவர் அண்மையில் பேபி நீ சுகரும்மா என்ற ஆல்பம் பாடலுக்கு அண்மையில் நடனம் ஆடி இருந்தார்.இந்த வீடியோ மாபெரும் ஹிட் அடித்து பல ரசிகர்ளிடம் நல்ல வரவேற்பினை இப்பாடல் பெற்றது.தற்போது வெளிநாட்டில் உள்ள அஸ்வின் கேபிள் கார் பயணத்தின் பொழுது இந்த பாடலுக்கு மாஸ் ஆக ரியாக்ஷன் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in