The Indian Times

ப்பா என்னா சத்தம்..சூப்பர் ஸ்டார் அளவுக்கு சாய்பல்லவிக்கு ரசிகர்கள் சத்தம் கொடுக்காங்க..மகிழ்ச்சியில் உறைந்த சாய் பல்லவி

வாய்ப்புக்காக போராடி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி திறமையால் மட்டும் இன்று முன்னேறி உச்ச நடிகை ஆக உருவெடுத்துள்ளவர் நடிகை சாய் பல்லவி.மருத்துவர் ஆன இவர் சினிமாவின் மேல் கொண்டுள்ள காதலால் வாய்ப்பு தேட துவங்கினார்.இதனால் ஆரம்பத்தில் பல நடன நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நல்ல வரவேற்பினை பெற்றார்.பின்னர் தொடர்ந்து வாய்ப்பு தேடி வந்த இவருக்கு இவர் முதன் முறையாக 2005 ஆம் ஆண்டு வெளியாகிய கஸ்தூரி மான் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார்.பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய தாம் தூம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவருக்கான சரியான வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில்,இவருக்கு ப்ரேமம் எனும் மலையாளப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.மேலும் தற்போது தமிழில் மட்டுமில்லாமல்,தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.ஒரே படத்தில் நடித்து தற்ப்போது முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார்.

Advertisement

அண்மையில் இவர் பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நிலையில்,இவர் பேசும் பொழுது ரசிகர்கள் அரங்கம் அதிரும் சத்தினை எழுப்பியுள்ளனர்.இதனால் பேச முடியாமல் சாய் பல்லவி மகிழ்ச்சியில் தவித்துள்ளார்.கதாநாயகன் ராணாவுக்கே ரசிகர்கள் சத்தம் எழுப்பாத நிலையில் கதாநாயகிக்கு எழுப்பிய சத்தம் அரங்கை அதிர செய்து சக நடிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெகு வேகமாக பரவி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சாய் பல்லவி வளர்ச்சியை கண்டு மகிழ்ந்துள்ளனர்.மேலும் இவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் எனவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : Galatta Tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in