The Indian Times

நெல்சனை கலாய்ப்பதை நிறுத்துங்க..கடுப்பாகிய பிரபலம்

வானொலியில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கியவர் பாலாஜி.இவரை அனைவரும் RJ பாலாஜி என்று தான் அழைப்பார்கள் அந்த அளவிற்கு வானொலியில் மிக பிரபலம். தற்போது கதாநாயகனாக மாறியுள்ள,ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது எல் கே ஜி படகின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அசத்தி வருகிறார்.நடிகர் மட்டும் இல்லாமல் , RJ பாலாஜி தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள்ளார்.இவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.நடிகராகவும் இயக்குனராகவும் பிஸியாக வேலை செய்து வருகிறார் RJ பாலாஜி.வானொலியில் RJ வாக பணியாற்றி தற்போது இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் பாலாஜி இதற்கு இவரது கடின உழைப்பே காரணம் ஆகும்

Advertisement

தற்போது இவர் ‘வீட்ல விசேஷம்’ என்ற படத்தினை இயக்கி நடித்துள்ளார்,இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்துகொண்டு வருகிறார்.இப்படம் வருகிற ஜூன் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.இதனால் முழுவதும் பிசியாக உள்ளார் ஆர் ஜே பாலாஜி.அண்மையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய பீஸ்ட் படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை என்பதால் நெட்டிசன்களும் விஜய் ரசிகர்களும் தொடர்ந்து இயக்குனர் நெல்சனை கலாய்த்து வருகின்றனர்.தொடர்ந்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் இதனை கண்ட ஆர் ஜே பாலாஜி கொந்தளித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது,நெல்சன் ஒரு சிறந்த இயக்குனர் அவருடன் நான் நிறைய நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளேன்,நான் அவரது மிகப்பெரிய ரசிகர் ,அடுத்தடுத்த படங்கள் மூலம் மக்களை மகிழ்விப்பார்,கேலியும் கிண்டல்களையும்தயவு செய்து நிறுத்துங்க என பதிவிட்டுள்ளார்.முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நெல்சனுக்கு ஆதரவாக பேசிய நிலையில் தற்போது ஆர்ஜே பாலாஜியும் கருத்து பதிவிட்டுள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in