The Indian Times

இனி தமிழிலும் சூப்பர் ஹீரோ படம்…சூர்யா அசத்த இருக்கும் புதிய படத்தின் அப்டேட்

நடிகர் சூர்யா நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் .இப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து பல படங்களில் தொடர்ச்சியாக சூர்யா நடித்து வந்தார்.இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவருக்கு நடிகர் என்ற அந்தஸ்து கிடைத்ததே தவிர முக்கிய நடிகர் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை.அதற்காக போராடிக்கொண்டிருக்கும் பொழுதுதான் இயக்குனர் பாலாவின் நந்தா படத்தில் வாய்ப்பு கிடைத்தது.தனது நடிப்பு திறமையை மொத்தமாக காண்பித்த நடிகர் சூர்யாவிற்கு இப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் ஆக அமைந்தது.இந்த படத்தின் மூலம் சூர்யா முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.

Advertisement

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார்.இப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகி விட்டார்.பாலாவுக்கு சூர்யாவிற்கும் பிரச்சனை இனி இந்த படம் உருவாகாது என பல வதந்திகள் பரவியது.இந்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் சூர்யா இயக்குனர் பாலா உடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு மீண்டும் படப்பிடிப்புக்கு செல்ல காத்திருப்பதாக கூறி அனைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.தற்போது இப்படத்தினை தொடந்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.அண்மையில் விக்ரம் படத்தில் இறுதி காட்சிகளில் வில்லனாக நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து இவர் கைதி 2 படத்திலும்,விக்ரம் 3 படத்திலும் வில்லன் ஆக உள்ளார்

Advertisement

அதன்படி இவர் தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரும்பு கை மாயாவி என்ற படத்தில் நடிக்க இருந்த நிலையில் படம் கைவிடப்பட்டது.இப்படம் ஹாலிவுட் படங்களை போல சூப்பர் ஹீரோ படமாக உருவாக இருந்தது ஆனால் பல்வேறு காரணங்களால் படம் கைவிடப்பட்டது.அண்மையில் மலையாளத்தில் வெளியாகிய சூப்பர் ஹீரோ படமான மின்னல் முரளி நல்ல வரவேற்பினை பெற்றது.அதனை தொடர்ந்து தற்போது இப்படமும் தமிழில் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் விரைவில் இப்படம் உருவாக வாய்ப்புள்ளதாக தகவலும் வெளியாகியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in