The Indian Times

என்னங்க டக்குனு கெட்ட வார்த்தை பேசிட்டீங்க…வீடியோவில் கெட்டவார்த்தை பேசிய விஜய் டிவி நடிகை

சின்னத்திரை முன்னணி நடிகை ஜீவிதா.சினிமாவில் சாதிக்க வேண்டும் என வாய்ப்பு தேடிய பெண்களில் இவரும் ஒருவர்.இவரது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாய் விஜய் டிவியில் தொடரில் வாய்ப்பு கிடைத்தது.கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஆபிஸ் என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகினார்.முன்னதாக நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த ஜீவிதா நடிப்பின் மேல் கொண்ட காதலால் வாய்ப்பு தேடிய இவருக்கு சின்னத்திரை வரவேற்பு அளித்தது.சின்னத்திரையில் இருந்து தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பால் வெள்ளித்திரையும் சென்றடைந்தார் ஜீவிதா.இவர் தமிழ் சினிமாவில் ஆருத்ரா,ஆண் தேவதை,வண்டி மற்றும் கடைக்குட்டி சிங்கம் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அதேபோல் சின்னத்திரையிலும் பாசமலர் ,மெல்ல திறந்தது கதவு,நீலி,கல்யாணமாம் கல்யாணம் போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.தனது எதார்த்தமான நடிப்பினால் மக்களை வெகுவாக கவர்ந்தவர் இவர்.சின்னத்திரையில் மட்டும் ரசிகர்களை கவராமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ரீல்ஸ் வீடியோக்களை அடிக்கடி பதிவு செய்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறார்.இவரது நடனத்தினை காணவே ஒரு கூட்டம் எப்பொழுதும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தயாராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.நடனம் மட்டும் இல்லாமல் வசனங்கள் பேசியும் மாஸ் ஆக வீடியோ வெளியிட்டு வருகிறார் நடிகை ஜீவிதா.

Advertisement

தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் ஒன்றை பேசியுள்ளார்.அந்த வசனத்தில் கெட்டவார்த்தை இடம்பெற்றுள்ளதால் அதனையும் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் ஜீவிதா.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது,இந்த வீடியோவில் இவரது ரசிகர்கள் என்னங்க டக்குனு கெட்டவார்த்தை சொல்லிட்டிங்க என கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் சிலர் அப்படியெல்லாம் பேசாதீங்க என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in