The Indian Times

அடேங்கப்பா…நயன்தாரா திருமணத்தில் கட்டியிருந்த சேலை மட்டும் இத்தனை லட்சமா??

விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவிற்கு இடையே இருக்கும் காதல் குறித்து அனைவரும் தெரிந்ததே.இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்தார்.இந்த படத்தில் விக்னேஷ் மற்றும் நயன்தாராவுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு ஆனது காதலாக மாறியது.தற்போது இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகையும் வெளி உலகையும் சுற்றி கொண்டிருக்கின்றனர்.மேலும் இருவரும் வாழ்க்கையில் மட்டும் இணைந்தது போதாமல் , சினிமாவிலும் இணைந்து சொந்தமாக ரவுடி பிக்சர் எனும் தயாரிப்பு நிறுவனமும் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்து மக்களுக்கு அளித்து வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் வெளியே செல்லும் பொழுது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இவர்கள் பதிவேற்றும் இந்த புகைப்படங்கள் தான் அன்று இணையத்தில் பெரிதளவு வைரலாகும் விஷயம் ஆகும் ,அந்த அளவிற்கு இவர்களது ரசிகர்கள் புகைப்படத்தினை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.எப்பொழுது இவர்கள் திருமணம் நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.இந்நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இருவரது திருமணமும் நடைபெற்றது.நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Advertisement

இந்நிலையில் திருமணத்தன்று நடிகை நயன்தாரா கட்டியிருந்த புடவை குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.திருமணம் அன்று நடிகை நயன்தாரா சிகப்பு கலர் புடவை கட்டியிருந்ததை அனைவரும் பார்த்தோம்,அதே சமயம் அந்த புடவையின் விலையை கேட்டால் நாம் அதிர்ச்சியில் உறைந்து விடுவோம் அந்த அளவிற்கு அதன் விலை அமைந்துள்ளது.இந்த புடவையின் விலை மட்டும் 25 லட்சமாம்,ஒரு மாதம் முழுக்க 13 பேர் இந்த புடவையை தயாரித்துள்ளனர்.இந்த விலை குறித்து வெளியான தகவல் இவர்களது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மேலும் சிலர் அவர்கள் கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள் 25 லட்ச ரூபாய்க்கு புடவை வாங்குவது பெரிதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்

https://youtu.be/t5Fwj-8zzoE

Embed video credits : Galatta Tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in