இதோ வந்துட்டு இருக்கு..விக்ரம் வசூலை மார்தட்டி சொன்ன கமல்ஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் திரையரங்கில் வெளியாகி உள்ளது.ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இப்படத்திற்கு கிடைத்துள்ளது.படத்தினை பார்த்த ரசிகர்கள் கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவில் படங்கள் சரியாக ஓடவில்லை அதனை தற்போது விக்ரம் நிவர்த்தி செய்துள்ளது.இறங்கிய தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியுள்ளது விக்ரம் என தெரிவித்து வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கவிஞர் சினேகன் தந்தையின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்

இதோ வந்துட்டு இருக்கு..விக்ரம் வசூலை மார்தட்டி சொன்ன கமல்ஹாசன் 1

விளம்பரம்

நடிகர் சூர்யா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.தற்போது வரை படத்திற்கு டிக்கெட்டுகள் அணைத்தும் விற்கப்பட்டு ஹவுஸ்புல் ஆகி ஓடிவருகிறது .அந்த அளவிற்கு உலகநாயகன் படம் பெரும் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்துள்ளது .இப்படத்தில் கமல் எழுதி பாடிய பத்தலை பத்தலை பாடல் ரசிகர்கள் கேட்க கேட்க பத்தாமல் மீண்டும் மீண்டும் கேட்டு வருகின்றனர்.அந்த அளவிற்கு உலகம் முழுவதும் ஹிட் அடித்துள்ளது இப்படம்,திரையரங்குகளில் ரசிகர்களை குத்தாட்டம் போடவைத்துள்ளது இந்த பாடல்.தற்போது இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குனருக்கு கார் பரிசாக வழங்கியுள்ளார்.அதேபோல் துணை இயக்குனர்கள் 13 பேருக்கு பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார்.நடிகர் சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்சினை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வாரணம் ஆயிரம் நாயகி சமீரா ரெட்டி குடும்பத்துடன் மலைப்பகுதியில் விடுமுறையை கொண்டாட்டம்

இதோ வந்துட்டு இருக்கு..விக்ரம் வசூலை மார்தட்டி சொன்ன கமல்ஹாசன் 2

விளம்பரம்

தயாரிப்பாளராகவும் நடிகர் ஆகவும் விக்ரம் வெற்றியினை உலகநாயகன் கொண்டாடி வருகிறார்.விக்ரம் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனையை செய்து வருகிறது.கேட்கும் இடமெல்லாம் கோடிகளில் வசூலைக்குவித்துக்கொண்டு இருக்கிறது விக்ரம் என கூறுகின்றனர்.அந்தளவிற்கு உலகநாயகன் வசூல் வேட்டையை நடத்தி வருகிறார்.இந்நிலையில் இன்று கமல்ஹாசன் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் விக்ரம் வசூல் குறித்து பேசியுள்ளார்,அதில் அவர் கூறியதாவது என்னை நடிக்க விட்டால் 100 கோடி சம்பாதிப்பேன்,இதோ வந்துட்டு இருக்கு என விக்ரம் வசூலை சூசகமாக கூறியுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  மனைவி பிரியா உடன் போட்டோஷூட்டில் கலக்கும் இயக்குனர் அட்லீ

விளம்பரம்

Embed video credits : LITTLE TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment