The Indian Times

Kuthu னா இதான் kuthu …ஆட்டத்தால் அரங்கையே அதிர வைத்த Bigg boss சுஜா | BiggBoss jodigal season2

பிக் பாஸ் இரண்டாவது  சீசனில் கலந்துகொண்டு மக்களுக்கு அறிமுகமாகியவர் சுஜா வருணே.இவர் முதன் முதலில் பிளஸ் 2 என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.அதன்பின் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.இதுவரை இவருக்கு தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரம் மட்டும் தான் கிடைத்து வந்தது.இவருக்கான சரியான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக அறிமுகமாகினார்.இதில் கலந்துகொண்டு தனது சிறப்பான விளையாட்டை மக்களிடம் காட்டி நல்ல வரவேற்பை பெற்றார்.இவருக்கு திருமணம் ஆகி ஆண் குழந்தை உள்ளது.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு ,கன்னடம் போன்ற சினிமாக்களிலும் படங்கள் நடித்துள்ளார்.இவர் துணை கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கவர்ச்சி பாடலுக்கும் சினிமாவில் நடனமாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் தனது கணவர் சிவாஜி தேவ் உடன் இணைந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் நடனமாடி வருகிறார்,கடந்த வாரம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து RRR படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அங்கயே அதிரவைத்துள்ளார் சுஜா.கண்டிப்பாக இவர் சக போட்டியாளருக்கு கடுமையான போட்டியாளராக அமைவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Embed video credits : vijay television

Advertisement

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in