The Indian Times

காதலுக்கு ஜாதி மதம் தேவை இல்லை என நிரூபித்த ஜோடிகள்|ஹுசைன் மணிமேகலை ரம்ஜான் கொண்டாட்டம் VLOGS

சன் மியூசிக் சேனலின் மூலம் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.சன் மியூசிக் சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமாகியவர் இவர்.தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.இவர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையினை வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

Advertisement

சன் மியூசிக் தொலைக்காட்சியில் இருந்து விஜய் தொலைக்காட்சிக்கு சென்று ஏற்கனவே பிரபலமாக இருக்கும் இவர் இரண்டு மடங்கு பிரபலமாகினார்.இவருக்கான சரியான வாய்ப்பினை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பொழுதுதான் கிடைத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு.இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நகைச்சுவையில் அதகளம் செய்து காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்து வருகிறார்.இவருக்கு தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

தற்போது கணவருடன் கிராமத்தில் ரம்ஜான் கொண்டாடியுள்ள மணிமேகலை அடம்பிடித்து தானே பிரியாணி செய்துள்ளார்.இந்த நகைச்சுவை நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூபில் பதிவேற்றியுள்ளார்.இந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பு இவரது ரசிகர்களிடம் கிடைத்து வருகிறது.

Embed video credits: Hussain manimegalai vlogs

Advertisement

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in