The Indian Times

BIGG BOSS ஜோடிகள் மேடையில் அமீரை பங்கமாக கலாய்த்த ராஜு

விஜய் தொலைக்காட்சி ஆண்டு தோறும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தவறாமல் நடத்தி வருகிறது.இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது இந்த நிகழ்ச்சி.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக வருபவர்களை வைத்து விஜய் டிவி BIGG BOSS ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.அவ்வாறு நடைபெற்ற முதல் சீசனில் அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் இணைந்து ஆடி டைட்டிலை தட்டி சென்றனர்.

தற்போது இரண்டாவது சீசன் புதிய ஜோடிகளுடன் தொடங்கியுள்ளது,இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பெரிதும் பேசப்பட்ட பாவனி மற்றும் அமீர் நடனமாடி வருகின்றனர்.இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மேடையில் பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜு அமீர் மற்றும் பாவனியை பங்கமாக கலாய்த்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

பாவனி அமீர் நடனம் முடிந்த பிறகு நடுவர் கருத்து கேட்க காத்திருந்த நிலையில்,அமீர் பாவனியிடம் நீங்க லவ் பண்ணுன பையன கல்யாணம் பண்றத விட உங்கள லவ் பண்ற பையன கல்யாணம் பண்ணிக்கோங்க என கூற அதற்கு பதிலளித்த ராஜு அப்படினா எத்தனை கல்யாணம் பண்ணுறதுனு கூறி அவரை கலாய்த்து அரங்கையே சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளார்

Embed video credits: BBU

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in