தியேட்டரில் வைத்து தாக்கப்பட்டாரா ப்ளூ சட்டை? தீயாய் பரவும் புகைப்படம் | Blue Sattai Maran

தியேட்டருக்கு வந்த ப்ளூ சட்டை மாறன் தாக்கப்பட்டார் என்ற செய்தி காலை முதலே வைரலாகி வருகிறது. ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ஒருவர் PVR-ல் வைத்து ப்ளூ சட்டை மாறன் தாக்கப்பட்டாரா என்று ஒரு பதிவை போட அது மிக வைரலாகி வருகிறது. ப்ளூ சட்டை மாறனை தமிழகத்தில் தெரியாத ஆட்களே இருக்க முடியாது. ஏனென்றால் எந்த படமாக இருந்தாலும் சரி, எப்பேர்பட்ட இயக்குநர்களாக இருந்தாலும் சரி தனது கருத்துக்களை நேர்மையாக வைப்பவர்தான் மாறன். ப்ளூ சட்டையை போட்டுக் கொண்டு ஒரு ரூமுக்குள் நின்று கொண்டு விமர்சனம் என்ற பெயரில் ஐந்து நிமிடம் வீடியோ வெளியிட்டால் மட்டும் போதாது, ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? என்று நெட்டிசன்கள் இவரை வறுத்து எடுத்த காரணத்தால் ஆண்டி இந்தியன் என்ற படத்தை இயக்கியிருந்தார் ப்ளூ சட்டை மாறன்.

தியேட்டரில் வைத்து தாக்கப்பட்டாரா ப்ளூ சட்டை? தீயாய் பரவும் புகைப்படம் | Blue Sattai Maran 1

விளம்பரம்

ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்த வலிமை படம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருந்தார். மேலும் அதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஒரு படி மேலே போய் அஜித் முகத்தில் தொப்பை விழுந்துவிட்டது, ஆட சொன்னால் பரோட்டாவிற்கு மாவு பிசையுறார் என்று உருவக்கேலி பண்ணத் தொடங்கிவிட்டார். இதனால் தல ரசிகர்கள் உச்சக்கட்ட கோபத்தில் இருந்தனர். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் எதற்க்கும் துணிந்தவன், மாறன் என வரிசையாக வந்த அனைத்துப் படங்களுக்கும் நெகடிவ் ரிவ்யூ கொடுத்து ரசிகர்களின் கடுமையான கோபத்திற்கு ஆளானர். Youtube Video Code Embed Credits: Behindwoods TV

தியேட்டரில் வைத்து தாக்கப்பட்டாரா ப்ளூ சட்டை? தீயாய் பரவும் புகைப்படம் | Blue Sattai Maran 2

விளம்பரம்

நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் ப்ளூ சட்டை மாறன் அவர்களை கடுமையான வார்த்தைகளில் வசைபாடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை முதலே சமூக வலைத்தளங்களில் ஒரு போட்டோ பரவி வைரலானது. அதில் பிவிஆர் சினிமாவில் ப்ளூ சட்டை இருப்பது போலவும், அவர் தாக்கப்பட்டு வெளியில் வந்தது போலவும் ஒரு போட்டோவை ஷேர் செய்து பிவிஆரில் என்னதான் ஆச்சு என்று ஒரு கேப்சனையும் போட்டு விட்டனர். இதனால் ப்ளூ சட்டையை ரசிகர்கள் தாக்கிவிட்டார்களா என்று பரபரப்பு நிலவியது. இதற்கு அவரே ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment