The Indian Times

பாலா மனைவிக்கும், ஒரு எம்.பிக்கும் தொடர்பு இருக்கு.. கே.ராஜன் சொன்ன அதிர்ச்சி தகவல் | K.Rajan

இயக்குனர் பாலாவிற்கும் அவரது மனைவி முத்துமலருக்கும் சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து ஆனது. 4 வருடம் இருவரும் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் பிரிவதாக முடிவெடுத்து பிரிந்துள்ளனர். இந்த பிரிவுக்கான காரணத்தை தயாரிப்பாளர் கே.ராஜன் போட்டு உடைத்துள்ளார். பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தவர் தான் பாலா. பின்னர் சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இநக்குனராக அறிமுகமான இவர் நந்தா,பிதாமகன், அவன் இவன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடைசியாக இவர் அதர்வாவை வைத்து இயக்கிய பரதேசி படம் வேற லெவல் ஹிட் அடித்தது. தமிழ் திரையுலகில் சிலர் மட்டுமே சமூக அக்கறை சார்ந்த படங்களை எடுப்பது உண்டு. சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆவல் உள்ள இயக்குனர்களும் தமிழ்திரை உலகில் இருக்கவே செய்கின்றனர் அந்த வகையில் உள்ள ஒருவர் தான் பாலா.

Advertisement

இவருக்கும் இவரது மனைவி முத்துமலருக்கும் 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது இவர்கள் கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சட்டபூர்வமாக பிரிந்துவிட்டதாக அறிவித்தனர். இருவரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சில நாட்காளகவே திரையுலகில் பல விவாகரத்துக்கள் நடைபெற்று வருகிறது. சமந்தா-நாகசைதன்யா, டி.இமான், தனுஷ்-ஐஸ்வர்யா முறிவு என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அந்த வரிசையில் தற்போது இயக்குநர் பாலாவும் இணைந்துள்ளார். YouTube video code embed Credits: Red Pix

Advertisement

இவர்கள் பிரிவுக்கான காரணம் குறித்து பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தற்போது புது செய்தியை கூறியுள்ளார். அதில் எம்.பி ஒருவருடன் பாலாவின் மனைவிக்கு தொடர்பு இருந்த காரணத்தினால் தான் பாலா அவரை பிரிந்தார் என்று கூறியுள்ளார். தனக்கு கிடைத்த தகவலின்படி எம்.பியுடன் 4 ஆண்டுகளாக தொடர்பில் இருக்கும் முத்துமலர் அடிக்கடி எம்.பியுடன் டெல்லி சென்று அங்கு அவருடன் தங்கி வந்ததாகவும், இதை பாலா பலமுறை கண்டித்தும் அவர் திருந்தாததால் பிரிந்துவிட்டார் என்றும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். முத்துமலரைப் பற்றியும் ஒரு எம்பி பற்றியும் அவர் இவ்வாறு கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in