The Indian Times

AR ரஹ்மான் இசையில் வெளியாகியது CHESS OLYMPIAD 2022 ANTHEM

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது இந்தியாவில் முதல் முறையாக அதுவும் தமிழகத்தில் நடைபெற உள்ளது.இதுவரை 43 செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றுள்ளது.இந்த போட்டிகள் எதுவும் இந்தியாவில் நடத்தப்படவில்லை.இந்நிலையில் முதல்முறையாக சென்னை மாமல்லபுரத்தில் இந்த போட்டிகள் வருகிற ஜூலை 28 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது.இந்த செஸ் போட்டி ஜூலை 28 ஆம் தேதி வரை தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்த போட்டிகளில் பல வீரர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்துகொள்ள உள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மேலும் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் மாணவிகளுக்கு செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றிபெறுபவர்களை செஸ் ஒலிம்பியாட் போட்டியை காணவும் அழைத்து வரப்பட உள்ளதால் பல மாவட்டங்களில் போட்டிகள் தொடங்கிவிட்டன.இந்த போட்டியை நேரில் காண்பதற்கு ஒரு நாளுக்கு இந்தியர்களுக்கு ரூ.2000 முதல் ரூ.3000 வரையும் வெளிநாட்டினருக்கு ரூ.6000 முதல் ரூ.8000 வரையும் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாம்.இந்த போட்டியில் பங்கேற்க 197 நாடுகளில் இருந்து முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிகழ்ச்சியில் பங்குபெற பல மக்களும் ஆர்வமாக உள்ளனர்

Advertisement

அண்மையில் இந்த CHESS OLYMPIAD 2022 ANTHEM டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது முழு பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்பாடலை ஏஆர் ரஹ்மான் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து எழுதியுள்ளனர்.இப்பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார் .நடன இயக்குனர் பிருந்தா இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து பாடலை பாடியுள்ளார்.இந்த பாடல் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது,மேலும் ரசிகர்கள் வருக வருக சென்னைக்கு வருக என்று சொல்லாமல்… வருக வருக தமிழ்நாட்டுக்கு வருக… என்று சொல்வது இனிமையாகவும் பெருமையாகவும் உள்ளது என ரசிகர்கள் பூரிப்பு அடைந்துள்ளனர்

Embed video credits : A.R.RAHMAN

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in