250KM SPEED-ல போனேனா??? ஏன் பொய்யா செய்தியை பறப்புறீங்க…விளக்கம் அளித்த TTF வாசன்

விளம்பரம்
விளம்பரம்

இளைஞர்கள் பலரும் யூடியூப் சேனல் தொடங்கி அதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.இதன் மூலம் சிலர் சினிமா வரை சென்றுள்ளனர்.சிலர் நல்ல வழியில் சென்றாலும் சிலர் தவறான உதாரணமாக மாறிவிடுகிறார்கள் இங்கு தான் பிரச்னையே உருவாகிறது.முன்னதாக யூடியூபில் பப்ஜி விளையாடி ஆபாசமாக பேசிய மதன் கைது செய்யப்பட்டு பல நாட்கள் சிறையில் இருந்தார்.அவர் தற்போது சிறையில் இருந்து பல மாதங்களுக்கு பிறகு வெளியே வந்த்துள்ளார்.இந்நிலையில் தற்போது புதியதாக TTF வாசன் என்பவர் ஆபத்தான முறையில் பைக்குகளை ஒட்டி இளைஞர்களையும் ஆபத்தில் தள்ளுவதாக புகார் எழுந்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சிவாஜியாகவே வாழும் சிவாஜி ரசிகர்..அச்சு அசல் இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியம்

250KM SPEED-ல போனேனா??? ஏன் பொய்யா செய்தியை பறப்புறீங்க...விளக்கம் அளித்த TTF வாசன் 1

விளம்பரம்

யூடியூபில் TTF வாசன் என்பவர் பைக் ட்ராவல் சேனல் வைத்துள்ளார்.பைக்கிலேயே இந்தியா முழுவதும் சுற்றி அதனை வீடியோ எடுத்து பதிவிட்டு வருகிறார்.இவரின் யூடியூப் பக்கத்தினை சுமார் 26 லட்சம் பேர் பின்தொடருகின்றனர்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சென்னையில் தனது ரசிகர்களை முதல் முறையாக வாசன் சந்திக்க வந்த பொழுது மிகப்பெரிய கூட்டமே கூடி போக்குவரத்து பாதித்ததால் போலீசார் அங்கு வந்து அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து சென்று அறிவுரை கூறி அனுப்பினர்.இந்நிலையில் தற்போது சில தினங்களுக்கு முன்பு வாசன் தந்து 23வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரசிகர்களை சந்தித்தார்.அங்கு கூட்டம் தாறுமாறாக திரண்டது.சினிமா பிரபலங்களுக்கு திரளும் வண்ணம் திரண்டது.

கட்டாயம் படிக்கவும்  சிவாஜியாகவே வாழும் சிவாஜி ரசிகர்..அச்சு அசல் இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியம்

250KM SPEED-ல போனேனா??? ஏன் பொய்யா செய்தியை பறப்புறீங்க...விளக்கம் அளித்த TTF வாசன் 2

விளம்பரம்

இந்நிலையில் வாசன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகள் வைக்கப்பட்டது.பைக்கில் நெடுஞ்சாலையில் 250கிமீ வேகத்தில் சென்றார் இதனால் இவரை பார்த்து பிறரும் சென்று விபத்து நேரிடும் அபாயம் உள்ளது மேலும் இவர் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறார் என பல குற்றசாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.பல நெட்டிசன்களும் சென்னை போலீசை இணையத்தில் டேக் செய்துள்ளனர்.இதனை பார்த்த போலீசாரும் இதனை கவனத்தில் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு  பதிலளித்த TTF வாசன் கூறியதாவது,நான் பைக்கில் 250 கிமீ ஸ்பீடில் போனேன் ,நெடுஞ்சாலையில் தான் அப்படி சென்றேன்,மேலும் பைக்கின் முழு வேகத்தினை பற்றி தெரிந்துகொள்ளாதான் அப்படி சென்றேன்,நான் பைக்கை தமிழ்நாட்டில் ஒட்டவில்லை ,என்னால் எந்த பொதுமக்களுக்கும் இடைஞ்சல் இல்லாமல் தான் சென்றேன் மேலும் பாதுகாப்பு உடன் தான் சென்றேன்.எனது வீடியோவில் ஹெல்மெட் அணிய அடிக்கடி சொல்வேன்,இப்படி நான் தப்பாக எல்லாரையும் வழிநடாத்துகிறேன் என்று கூறுவது மிக கஷ்டமாக உள்ளது.என் பசங்களை நான் ரொம்ப மதிக்கிறவன்,அவங்கள தப்பா வழிநடத்தமாட்டேன் என விளக்கம் அளித்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  சிவாஜியாகவே வாழும் சிவாஜி ரசிகர்..அச்சு அசல் இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியம்

விளம்பரம்

Embed video credits : Behindwoodstv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment