The Indian Times

Snake Babu-வாக களம் இறங்கிய சிவாங்கி…சிரிச்சே காலியான போட்டியாளர்கள்…| Cook with comali

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எப்பொழுது சனி ஞாயிறு வரும் என மக்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்துள்ளது இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது .ஒவ்வொரு வராமும் இவர்கள் எந்த கெட்டப்பில் வருவார்கள் என்று எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பல பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் அதில் பலர் வெளியேறி இறுதியாக அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா மற்றும் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் இணைந்துள்ளனர்.இவர்களுக்கிடையே தற்போது போட்டி பலமாக நடந்துகொண்டு வருகிறது.இன்னும் வைல்ட் கார்டில் இருந்து சென்ற குக்குகள் மீண்டும் வந்தால் அதகளம் தான் அந்த அளவிற்கு ஒருவருக்கொருவர் போட்டி போட்டு சமையல் செய்து வருகின்றனர்.சமையல் மட்டும் இல்லாமல் கோமாளிகள் இணைந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் காமெடி கலவரம் செய்து வருகின்றன.

வாரம் வாரம் இவர்கள் என்ன கெட்டப்பில் வருவார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது.இந்த வாரம் கோமாளிகள் அனைவரும் பிரபல நட்சத்திரங்கள் போல் வேடமணிந்து வந்து அசத்தியுள்ளனர்.கடந்த இரண்டு வாரமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத சிவாங்கி இந்த வாரம் சினேக் பாபு வடிவேல் கெட்டப்பில் களம் இறங்கியுள்ளார்.இந்த கெட்டப்பில் வந்து செஃப் தாமுவிடம் சினேக் பாபு வசனத்தினை பேசி அரங்கத்தினையே சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளார்.இந்த வார நிகழ்ச்சிக்கான ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது.இது ரசிகர்களிடம் இந்த வார நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது.இந்த வீடியோ குக் வித் கோமாளி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Embed video credits : Vijay Television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in