தமிழ் சினிமா ரசிகர்களால் மக்கள் செல்வன் என அன்பாக அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி.இவரின் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.இவர் தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் டிஎஸ்பி படத்தில் நடித்துள்ளார்.கார்த்திகேயன் சந்தானம் இப்படத்தினை தயாரித்துள்ளார்.இமான் இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.படத்தின் கதையை கீழே காண்போம்.
படத்தின் கதை
திண்டுக்கல் மாவட்டத்தில் கலக்கலான இளைஞனாக வலம் வருகிறார் வாஸ்கோடா காமா என்றழைக்கப்படும் விஜய் சேதுபதி. இவரது தந்தை பூ வியாபாரி.அரசாங்க உத்தியோகத்தில் தான் சேர்வேன் என கடுமையாக போராடி வருகிறார் விஜய் சேதுபதி.இடையில் கதாநாயகி அணு க்ரீத்தி உள்ளே வருகிறார்,அவர் பின்னால் காதல் கொண்டு சுற்றுகிறார் கதாநாயகன் விஜய் சேதுபதி.படம் இப்படி ஒரு பக்கம் செல்ல விஜய் சேதுபதியின் தங்கை கல்யாணத்திற்கு அவரது நண்பர்கள் திண்டுக்கல் வரவே அங்கு அவர்களுக்கும் வில்லனுக்கும் சண்டை ஏற்படுகிறது.இதனால் மார்க்கெட்டில் அனைவரது முன்பும் வில்லனை அடிக்கிறார் விஜய் சேதுபதி.இதில் இருந்து இருவருக்கும் பகை ஆரம்பமாகிறது,இதனால் மறைந்து வாழ்கிறார் விஜய் சேதுபதி.பின்னர் அவர் எப்படி போலீஸ் ஆகினார்,வில்லனுக்கு எப்படி ஆட்டம் காட்டினார் என்பதே படத்தின் மீதி கதை
படத்தின் விமர்சனம்
பக்கா கிராமத்து இளைஞனாக சிறப்பான நடிப்பினை காண்பித்துள்ளார் விஜய் சேதுபதி.முதல் முறையாக சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிய அணு க்ரீத்தி நடிப்பு ஈடுபடவில்லை.காமெடியனாக வரும் குக் வித் கோமாளி புகழ் காமெடி சில இடங்களில் மட்டுமே ஒர்கவுட் ஆகியுள்ளது.வில்லன் பிரபாகர் நடிப்பு விஜய் சேதுபதிக்கு இணையாக உள்ளது படத்திற்கு கூடுதல் சிறப்பு அளித்துள்ளது.இது வழக்கமான பொன்ராம் படம் போன்று இல்லை ,ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தினை கொடுத்துள்ளார் பொன்ராம்.திரைக்கதை வேகமாக இருந்தாலும் கதை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.இசையமைப்பாளர் இமான் பாடல் எதிர்பார்த்த ஹிட் கொடுக்கவில்லை,பின்னணி இசை மட்டும் ஓகே என்று சொல்லும் அளவிற்கு உள்ளது.மொத்தத்தில் பல படங்களில் இடம்பெற்ற பழிவாங்கும் கதை இது.
DSP படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 2/5
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in