The Indian Times

ப்பா..நடிப்பின் நாயகி …பூஜா ஹெக்டே போல் நடித்து அசத்திய தர்ஷா குப்தா..

மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்தவர் தர்ஷா குப்தா.மாடலிங் துறையில் இருந்த இவர் வெள்ளித்திரையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என காத்திருந்த நிலையில் வாய்ப்பு தேடி வந்தார் .தொடர்ந்து முயற்சி செய்த இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது.இதன்மூலம் இவர் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகிய முள்ளும் மலரும் என்ற தமிழ் சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் முதன்முறையாக அறிமுகம் ஆகினார்.இந்த சீரியலை தொடர்ந்து அவளும் நானும் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இவர் நடித்த எந்த நாடகத்திலும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ஆனது கிடைக்கவில்லை.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பின்னர் வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் நீண்ட நாட்களுக்கு சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த தர்ஷா இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ செய்து வந்தார்.ரீல்ஸ் வீடியோ மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார் தர்ஷா.இந்த ரீல்ஸ் வீடியோக்கள் வைரலாகி இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.இதனை தொடர்ந்து இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக வாய்ப்பு கிடைத்தது.இதை சரியாக பயன்படுத்தி போட்டியில் கலந்துகொண்டார்.தனது சமையல் திறமையை காண்பித்து மக்களிடம் அறிமுகம் ஆகினார் .இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.

Advertisement

தற்போது தர்ஷா குப்தா பல படங்களிலும் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.அடிக்கடி இவர் பதிவிடும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பெரிதளவு வைரலாகி வருகிறது.அண்மையில் இவர் புல்லட் பாடலுக்கு போட்ட மரண குத்தாட்டம் இணையத்தில் வைரலாகியது.இவர் பதிவிடும் அனைத்து வீடியோக்களும் பெருமளவு வைரலாக்கி வருகின்றனர் இவரது ரசிகர்கள்.தற்போது பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே பேசிய வசனம் ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வந்த நிலையில் அதனை பேசி பூஜா ஹெக்டே போல் பேசியுள்ளார் தர்ஷா;இந்த வீடியோவை இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தற்போது இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது இதனை பார்த்த இவரது ரசிகர்கள் பேசாமல் பீஸ்ட் படத்தில் பூஜாவிற்கு பதிலாக நீங்களே நடித்திருக்கலாம் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in