The Indian Times

தமிழக பிஜேபி தலைவர் சிங்கம் அண்ணாமலையின் அரபி TEASER வெளியாகியது

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருப்பவர் அண்ணாமலை.கர்நாடகாவை சேர்ந்த இவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி.விருப்ப ஓய்வு பெற்ற இவர் நாட்டு நலன் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.கட்சிக்காக அயராது உழைத்ததால் இவரது கடின உழைப்பிற்கு பரிசாக குறுகிய காலத்திலேயே பாரதிய ஜனதா கட்சி இவரை தமிழ்நாட்டு கட்சி தலைவர் ஆக்கியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

தமிழக தலைவர் பதவியை சந்தோசமாக ஏற்றுக்கொண்ட அண்ணாமலை தொடர்ந்து அதிகமாக பிஜேபி க்காக குரல் கொடுக்க தொடங்கினார்.மிகவும் சுறுசுறுப்பாக கட்சிக்காக இன்றுவரை இயங்கி வருகிறார். பிரச்சனைகள் வந்தாலும் சரி என பல பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் தைரியமாக பிற அரசியல் காட்சிகளை விமர்சனம் செய்து வருகிறார். தற்போது அண்ணாமலைக்கு கன்னட சினிமாவில் வாய்ப்பு கிடைத்துள்ளது,இதனால் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.முழுநேர அரசியல்வாதியாக இருந்த இவர் தற்போது சினிமா பக்கம் திரும்பியுள்ளார்.கன்னட திரைப்படமான அரபி என்ற படத்தில் நடித்துள்ளார் அண்ணாமலை.

Advertisement

பிரபல கன்னட இயக்குனர் ராஜ்குமார் இயக்கி வரும்,இரண்டு கைகளை இழந்தும் நீச்சலில் சாதனை படைத்த விஸ்வாசின் கதையில் உருவாகி வரும் அரபி எனும் படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார் அண்ணாமலை,இந்த கதையில் அதுவும் குறிப்பாக இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அண்ணாமலை சரியான ஆள் என்பதால் அவரிடம் இயக்குனர் கதை கூறியுள்ளார்,கதை பிடித்துப்போன அண்ணாமலை 1 ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கி இப்படத்தில் நடித்துள்ளார்.தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.பிஜேபி கட்சியினர் இந்த டீசரை கொண்டாடி வருகின்றனர்

Embed video credits : A2 MUSIC

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in