The Indian Times

Engineering Student-னா யாருன்னு நினைச்சீங்க- Don 1st promo

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டான்.இதில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார் மேலும் இவர்களுடன் ,எஸ் ஜெ சூர்யா,சமுத்திரக்கனி,பாலா,விஜய் மற்றும் ஷிவாங்கி ஆகியோர் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க,சிவகார்த்திகேயன் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.promo லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

இப்படம் உலகம் முழுவதும் மே 13 ஆம் தேதி வெளியாக உள்ளது.டாக்டர் வெற்றிக்கு பிறகு வெளியாகும் சிவகார்த்திகேயன் படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் வந்து இப்படத்தில் கலக்கி உள்ளார்.படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தற்போது படத்தின் முதல் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.அதில் நடிகர் சிவகார்த்திகேயன் என்ஜினீரியரிங் ஸ்டுடென்ட் னா யாருனு நினைசீங்கனு நகைச்சுவையாக நீளமான வசனம் பேசியுள்ளார்.இந்த ப்ரோமோவே மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது எனலாம்.பல திரையரங்குகளில் படத்தின் முன்பதிவுகள் ஆராம்பமாகிவிட்டது.காலை நான்கு மணி முதலே காட்சிகள் தொடங்கப்பட உள்ளது.

Embed video credits : lyca production

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in