The Indian Times

தமிழ் படத்தில் MS.dhoni-யா? ஜோடி Nayanthara-வா என்னங்க சொல்லுறீங்க??

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி,இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.தமிழக மக்கள் இவரை தல தோனி என்றுதான் அழைப்பார்கள் அந்த அளவிற்கு தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.

இவருக்காகவே கிரிக்கெட் பார்க்க தொடங்கியவர்கள் பலர் உள்ளனர்.இந்நிலையில் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு அண்மையில் படமாக்க பட்டு வெளியாகியது.அதில் கதாநாயகனாக மறைந்த சுஷாந்த் நடித்திருந்தார்.இந்நிலையில் தற்போது தோனி அவர்கள் நேரிடையாக தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.ஆனால் அவர் நடிக்கப்போவதில்லை அதற்கு பதிலாக தற்போது தோனி அவர்கள் தமிழில் புதிய படத்தினை தயாரிக்க உள்ளார் ,கதாநாயகியை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளதால் இப்படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுவரை இதுகுறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ் அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படம் உறுதியானால் நிச்சயம் தோனி ரசிகர்களுக்கும் ,நயன்தாரா ரசிகர்களுக்கும் விருந்தாக தான் அமையும்

Embed video credits : cineulagam

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in