The Indian Times

முடியாததை முடிச்சிகாட்டுறவன்தான் டான் |DON PROMOS

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டான்.கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.இதில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார் மேலும் இவர்களுடன் ,எஸ் ஜே சூர்யா,சமுத்திரக்கனி,பாலா,விஜய் மற்றும் ஷிவாங்கி ஆகியோர் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க,சிவகார்த்திகேயன் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.promo லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ளது.டாக்டர் வெற்றிக்கு பிறகு வெளியாகும் சிவகார்த்திகேயன் படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் வந்து இப்படத்தில் கலக்கி உள்ளார்.படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தற்போது இப்படத்தின் அனைத்து ப்ரோமோக்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோக்கள் சில புதிய காட்சிகளுடன் வெளியாகியுள்ளது.இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது படத்திற்காக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.காலை நான்கு மணி முதலே படத்தின் காட்சிகள் தொடங்கப்பட உள்ளது

Embed video credits: lyca productions

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in