படத்தில் வில்லன்,நிஜத்தில் ஹீரோ….சிறப்பு குழந்தைகளுக்கு விசித்திரன் படம் பார்க்க ஏற்பாடு செய்த ஆர்கே சுரேஷ்

இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் கொடூர வில்லனாக அறிமுகம் ஆகியவர் ஆர் கே சுரேஷ்.இப்படத்தில் இவருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.இதை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் சுரேஷுக்கு வர தொடங்கியது.அதன்படி மீண்டும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விஷாலின் மருது படத்தில் ரோலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பொற்கோவிலில் நடிகை ஹன்சிகா சுவாமி தரிசனம்

படத்தில் வில்லன்,நிஜத்தில் ஹீரோ....சிறப்பு குழந்தைகளுக்கு விசித்திரன் படம் பார்க்க ஏற்பாடு செய்த ஆர்கே சுரேஷ் 1

விளம்பரம்

காண்பவர்களை கொலைநடுங்க செய்யும் வில்லனாக நடித்து வந்த இவர் தற்போது கதாநாயகனாக களம் இறங்கி இருக்கிறார்.பில்லா பாண்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவிற்கு அறிமுகமாகினார்.மேலும் நடிப்பில் மட்டும் இல்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார்.இவர் தயாரிப்பில் வெளியாகிய தர்மதுரை படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது

கட்டாயம் படிக்கவும்  முடிந்தது தமிழும் சரஸ்வதியும் சீரியல்... கடைசி எபிசோட் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்

படத்தில் வில்லன்,நிஜத்தில் ஹீரோ....சிறப்பு குழந்தைகளுக்கு விசித்திரன் படம் பார்க்க ஏற்பாடு செய்த ஆர்கே சுரேஷ் 2

விளம்பரம்

தற்போது இவர் விசித்திரன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் பாண்டிச்சேரியில் இவர் சிறப்பு குழந்தைகள் விசித்திரன் படத்தினை பார்க்க ஏற்பாடு செய்துள்ளார்.இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு உண்மையிலேயே நல்ல மனசு சார் என அவரை வாழ்த்தி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சின்னத்திரை நடிகர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment