வெண்ணிலா கபடி குழு நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

2009 ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகிய படம் வெண்ணிலா கபடி குழு.இப்படத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடித்திருந்தார்.இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு நண்பராக நடித்தவர் தான் ஹரி வைரவன்.இப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்று பலருக்கு விருப்பமான படங்களில் ஒன்றாகியது.இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார் ஹரி வைரவன்.இப்படத்திற்கு பிறகு குள்ளநரி கூட்டம் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  பாலா இயக்கத்தில் அருண் விஜய் மிரட்டும் வணங்கான் படத்தின் ட்ரைலர் இதோ

வெண்ணிலா கபடி குழு நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் 1

விளம்பரம்

பின்னர் ஹரி வைரவனுக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை.இந்நிலையில் இடையில் உடல் நலமும் சரியில்லாமல் கோமாவில் இருந்தார்.அவர் மனைவி தான் அவரை பார்த்துக்கொண்டிருந்தார்.இந்த வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.இந்நிலையில் இவருக்கு சர்க்கரை வியாதி இருந்த நிலையில் கை மற்றும் கால் வீங்கியது.இதற்கு சிகிச்சை பெற்று வந்த ஹரிவைரவன் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மரணம் அடைந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் இளைஞர்களை மயக்கும் பிக் பாஸ் ஜனனியின் புகைப்படங்கள்

வெண்ணிலா கபடி குழு நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் 2

விளம்பரம்

இந்த செய்தி தற்போது சினிமா ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.குறைவான படங்கள் நடித்தாலும் தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர்.இவரின் மறைவு சக நடிகர்கள் மற்றும் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இவரின் இறுதி சடங்கு இன்று மதுரையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ரசிகர்கள் அவரின் ஆத்மா சாந்தி அடைய தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment