நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழப்பு

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தவர் இவர்.இவர் நவயுகம் என்ற படத்தில் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.பின்னர் தமிழில் இவர் கதாநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இந்த படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் மீனா.

கட்டாயம் படிக்கவும்  சந்தானம் நடிக்கும் இங்க நான்தான் கிங்கு படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியது

நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழப்பு 1

விளம்பரம்

ரஜினிகாந்த் நடிப்பில் முத்து படத்தில் கதாநாயகியாக நடித்தார்,கமல்ஹாசன் நடிப்பில் அவ்வை சண்முகி படத்தில் கதாநாயகியாக நடித்தார்,அஜித்குமார் நடிப்பில் வில்லன் படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்தார்.இந்த மூன்று படங்களுமே அவருக்கு பெரும் ஹிட் படங்கள் ஆகும்.மேலும் பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார் மீனா.இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவருக்கும் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.இவர் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து அசத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள்

நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழப்பு 2

விளம்பரம்

இந்நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது மேலும் நுரையீரல் பாதிப்பும் இருந்துள்ளதால் அவரை சென்னை ஆழ்வார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்த செய்தி வெளியாகி ரசிகர்களுக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை வித்யாசாகருக்கு தெரிவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment