The Indian Times

தியேட்டர் வாசலில் மரண குத்து குத்திய உலகநாயகன் ரசிகை

உலக சினிமாவிற்கெல்லாம் நாயகன் உலகநாயகன் என்பதை ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து வருபவர் கமல்ஹாசன்.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.அன்று முதல் இன்று வரை உலகநாயகனுக்கு இருக்கும் ரசிகர்கள் அதிகம்.தற்போது உள்ள இளைஞர்களும் உலகநாயகனை ரசிக்கின்றனர்.காரணம் அவரது நடிப்பு மற்றும் சிந்தனையும் கூட.பலருக்கும் இவர் முன்மாதிரியாக விளங்கி வருகிறார்.சினிமாவில் உள்ள பலருக்கும் கமல் உடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என ஆசை உள்ளது.காரணம் அந்த அளவிற்கு அவரது நடிப்பு அனைவரையும் ஈர்த்து உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.ரசிகர்கள் வெறித்தனமாக அதிகாலை 4 மணிக்கே படத்தினை கண்டு ரசித்து வருகின்றனர்.படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்கள் கூறும் ஒரே வார்த்தை ஆண்டவர் தமிழ் சினிமாவை காப்பாத்திட்டாரு என்று தான்.சமீப காலமாக பிறமொழி படங்கள் தமிழகத்தில் வெற்றிபெற்று வந்த நிலையில் விக்ரம் வெற்றிபெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சியை அனைவருக்கும் அளிக்கிறது.

Advertisement

அதிகாலை 4 மணிக்கே திரையரங்குகள் முன் ரசிகர்கள் கூடி ஆட்டம் பாட்டம் மற்றும் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினார்கள்.சென்னையில் கமல்ஹாசன் ரசிகை ஒருவர் நண்பர்களுடன் சேர்ந்து திரையரங்கு முன்பு போடும் ஆட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் கூடுதலாக வெறியாகி அவர்களும் இணைந்து ஆடியுள்ளார்கள்.உலகநாயகன் போல் உடை அணிந்து நடனமாடி அனைவரையும் அசர செய்துவிட்டார் அந்த பெண்.

Embed video credits: Thanthi TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 Comment

Maharajan — 4/6/2022

Setup dance nnu nallaave theriyuthu. Paavam Andavar nilaimai