The Indian Times

தன்னை கேலி செய்தவருக்கு சரியான பதிலடி கொடுத்த CWC சிவாங்கி

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார்.இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.பெரும் பாடகியாக வேண்டும் என்பதே இவரது கனவு அதன்படி இவர் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.இவரின் நகைச்சுவைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கினார்.தான் எதார்த்த பேச்சுகளினாலும் நகைச்சுவைகளினாலும் மக்களை சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார்.தொடர்ந்து 3 சீசன்களாக இந்நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார் சிவாங்கி.இவர் அங்கு செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு செட்டில் கலாட்டா செய்து வருகிறார்.இவரின் வெகுளி தனமான பேச்சினால் பல ரசிகர்களையும் சிரிக்க வைத்து தனது வசம் இழுத்தார்.இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார் சிவாங்கி.

Advertisement

இவரது நகைச்சுவை திறமையை கண்டு நடிகர் சிவகார்த்திகேயன் டான் படத்தில் வாய்ப்பளித்தார்.இப்படத்தின் மூலம் இவர் வெள்ளித்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்..இப்படத்தில் இவரின் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.பலருக்கு சிவாங்கியை பிடித்தாலும் சிலருக்கு சிவங்கியை பிடிப்பதில்லை,இந்நிலையில் கடந்த 2 வாரமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிவாங்கி வரவில்லை என்பதால் ஒருவர் நல்ல வேலை இந்த வாரம் சிவாங்கி நிகழ்ச்சியில் இல்லை என்று கிண்டல் செய்யும் படி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்,அதற்கு பதிலளித்த சிவாங்கி இல்லாத என்ன பத்தி பேசி வெறுக்கிறதுக்கு,இருக்குற செம்ம கோமாளிகளை பத்தி பேசுங்க இன்னும் சூப்பரா இருக்கும் ,அதை பத்தி யோசிங்க என கூறி பதிவிட்டுள்ளார்.இந்த ட்வீட் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இவரின் இந்த கருத்துக்கு பல ரசிகர்கள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in