The Indian Times

செம்ம Cute….Kim Kim Kim பாடலுக்கு நடனமாடிய மஞ்சு வாரியார்

மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் மஞ்சு வாரியார்.அந்த அளவிற்கு சினிமாவில் உயரம் தொட்டுள்ளார்.இவர் முதலில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பாகிய நாடகத்தின் மூலம் தான் சினிமாவிற்குள் நுழைந்தார்.இவர் வெள்ளித்திரையில் முதல் முதலில் 1995 ஆம் ஆண்டு வெளியாகிய சாக்ஷ்யம் என்ற மலையாளப்படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து முழுக்க மலையாள படங்களில் மட்டும் கவனம் செலுத்தி நடிக்க தொடங்கி மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதுவரை தமிழ் சினிமா பக்கம் வராத இவர்,2019 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார்.இந்த நடிப்பினால் தமிழ் சினிமாவையே தனது பக்கம் திரும்ப செய்து,இவரை இத்தனை நாள் உபயோகிக்கவில்லையே என்று இயக்குனர்கள் வருந்தும் அளவிற்கு தனது நடிப்பு திறமையை காண்பித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.தற்போது வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் ajith61வது படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.இது இவருக்கு 2 வது தமிழ் படம் ஆகும்.

Advertisement

தற்போது மஞ்சு வாரியார் ஜேக் அண்ட் ஜில் என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவர் பாடிய பாடல் ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.அதன்படி இசையமைப்பாளர் ராம் சுரேந்தர் இசையில் கிம் கிம் என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார்.இந்த பாடலுக்கு தனது தோழியுடன் இணைந்து கியூட் ஆக நடனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இவரது ரசிகர்கள் இந்த வீடியோவை வைரல் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in