The Indian Times

அரபிக்குத்து பாடலுக்கு மிரட்டல் நடனம் போட்டு பூஜா ஹெக்டேவை ஓரம் கட்டிய விஜய் டிவி சீரியல் நடிகை

ஆயுத எழுத்து என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியவர் நடிகை சரண்யா.ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவருக்கு நடிப்பின் மேல் உள்ள ஆர்வத்தினால் நடிப்பில் களம் இறங்கினார்.இவருக்கு முதல் சீரியலே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.அதனை தொடர்ந்து நெஞ்சம் மறப்பதில்லை தொடரிலும் நடித்துள்ளார்.தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரன் தொடரிலும் இவர் நடித்து வருகிறார்.கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகிய சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகினார்.

Advertisement

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 லட்சம் பேர் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.இதில் அவ்வப்பொழுது தனது ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவருக்கு சின்னத்திரையில் குறிப்பட்ட அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர்.ஆனால் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ரசிகர்களை வைத்துள்ளார் தனது ரசிகர்களுக்காகவே அடிக்கடி நடனம் ஆடி ரீல்ஸ் வெளியிடுவார் சரண்யா.

Advertisement

தற்போது இவர் அரபிக்குத்து பாடலுக்கு மிரட்டலான நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இதனை வீடியோவாக பதிவிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவில் நடிகை பூஜா ஹெக்டே ஆடிய நடந்தினை அப்படியே ஆடியுள்ளார்.இதனால் இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவில் ரசிகர்கள் நீங்க சூப்பரா நடனம் ஆடுறீங்க,பூஜாவை விட நல்லா நடனம் ஆடுறீங்க என புகழ்ந்து தள்ளி வீடியோவிற்கு லைக் செய்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in