The Indian Times

இயக்குனர் T.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி…உடல்நிலையில் முன்னேற்றமா?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் ,நடிகர்,இசையமைப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தவர் T.ராஜேந்தர்.அதில் வெற்றியும் கண்டுள்ளார்.ஒருதலை ராகம் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் இயக்குனராக நுழைந்தவர் இவர்.இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனால் தொடர்ந்து படங்களை இயக்க தொடங்கிவிட்ட்டார் T.ராஜேந்தர்.பெண்களை தொடாமல் நடிப்பவர் என்ற பெயரும் இவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.பின்னர் அரசியலில் இறங்கி அதன் ஆழத்தினையும் பார்த்தவர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் ஒரு பெண் குழந்தை உள்ளது.இதில் மகன் சிலம்பரசன் தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் நடிகர் ஆக உள்ளார்.இரண்டாவது மகன் குறளரசன் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் பணியாற்றியுள்ளார். T.ராஜேந்தர் அவர்களின் அடுக்கு மொழி வசனத்திற்கு இன்றளவுக்கும் ரசிகர்கள் உள்ளனர்.அதிலும் குறிப்பாக வாடா என் மச்சி வாழைக்காய் பஜ்ஜி என கூறிக்கொண்டு படத்தில் எதிரிகளை பந்தாடுவது எல்லாம் இவரால் மட்டும் முடிந்ததே.

Advertisement

இந்நிலையில் T.ராஜேந்தர் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திடீரென செய்தி வெளியாகியது.இது திரை உலகினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியினை அளித்துள்ளது.கடந்த நான்கு நாட்களாக ராஜேந்தர் மருத்துவமனையில் தான் இருப்பதாகவும்,தற்போது அவர் அபாயகட்டத்தினை தாண்டிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.நடிகர் சிலம்பரசன் தந்தை T.ராஜேந்தரை மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்து செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

Embed video credits: cineulagam

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in