பொன்னியின் செல்வன் பாடலை செதுக்கும் AR.ரஹ்மான்…FIRST SINGLE UPDATE

தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம்.காரணம் தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்ததால்.மற்ற இயக்குனர்களை விட இவரது இயக்கம் வித்தியாசமாகவும் தனியாகவும் இருக்கும் என்பதால் இவரின் படத்திற்கு ரசிகர்கள் அதிகம்.சாதாரண இயக்குனர் ஆக தனது வாழ்க்கையை தொடங்கியவர் இயக்குனர் மணிரத்தினம்.தமிழில் இவர் முதன் முதலாக இயக்கிய படம் பகல் நிலவு.இப்படத்தில் நடிகர் முரளி,நடிகை ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகியது.இவருக்கு தமிழ் சினிமாவில் இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றுக்கொடுத்த படம் என்றால் அது மோகன் வைத்து இவர் இயக்கிய மௌனராகம்.அன்று ஆரம்பித்த வெற்றி தளபதி,ரோஜா ,நாயகன்,பம்பாய் என வரிசையாக வெற்றி இவரின் வீட்டு வாசலில் நின்றது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய இயக்குனர் பாக்கியராஜ்

பொன்னியின் செல்வன் பாடலை செதுக்கும் AR.ரஹ்மான்...FIRST SINGLE UPDATE 1

விளம்பரம்

மணிரத்தினத்தின் நீண்ட நாட்கள் கனவு பொன்னியின் செல்வன்.இப்படத்தினை எப்படியாவது இயக்கிவிட வேண்டும் என ஆவலுடன் இருந்தார்.இறுதியாக அதற்கான நேரமும் வந்தது.இப்படத்தினை விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.இப்படத்தின் போஸ்டர்களை அண்மையில் வெளியிட்ட படக்குழு தற்போது படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.டீசரில் நடிகர் விக்ரம் நடிப்பில் அசத்தியிருக்கிறார் அதேபோல கார்த்தி மற்றும் ஜெயம் ரவியும் தங்களது பங்கினை சிறப்பாக ஆற்றியுள்ளனர்.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தங்கசிலை போல மின்னும் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

பொன்னியின் செல்வன் பாடலை செதுக்கும் AR.ரஹ்மான்...FIRST SINGLE UPDATE 2

விளம்பரம்

செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாக உள்ளது.இந்நிலையில் படத்தின் முதல் பாடல் அப்டேட்டினை வெளியிட்டுள்ளது படக்குழு ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக உள்ளது.இப்பாடலை உருவாக்க ஏ ஆர் ரஹ்மான் கடுமையாக பெரிய குழுவுடன் உழைத்துள்ளார்.இந்த பாடல் உருவாக்கும் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் பாடலுக்கு ஆவலாக காத்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் மிரட்டும் வீர தீர சூரன் படத்தின் டீசர் இதோ

விளம்பரம்

Embed video credits : TIPS TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment