The Indian Times

வானத்தைபோல பிரபுதேவா போல் அவர் முன்பே பேசி அசத்திய வரலட்சுமி சரத்குமார்..

பிரபல நடிகர் சரத்குமார் அவர்களின் மகள் தான் நடிகை வரலட்சுமி .இவரது மகள் வரலட்சுமி தற்போது சினிமா உலகை கலக்கி வரும் நடிகையாக வலம் வருகிறார்.போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் வரலட்சுமி.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இருப்பினும் சினிமா ரசிகர்களிடம் இவர் சென்றடையவில்லை.பின்னர் இயக்குனர் பாலா இயக்கத்தில் தரை தப்பட்டை படத்தில் நடித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தினையும் பெற்று அசத்தினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழ் மொழி மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம்,தெலுங்கு என பல மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார்.இவர் அறிமுக படத்திற்கே சிறந்த அறிமுக நடிகை என 2 விருதுகளை பெற்றுள்ளார்.கதாநாயகி வேடமாக இருந்தாலும் சரி,வில்லி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி கதாநாயகர்களுக்கு சரிசமமாக அடித்து நொறுக்கி வருகிறார்.இவர் சமந்தா நடிப்பில் வெளிவர இருக்கும் யசோதா படத்தில் நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் வரலட்சுமி.தந்தையை எதிர்பார்க்காமல் தனது கடின உழைப்பால் இத்தகைய இடத்தினை அடைந்துள்ளார் என்றால் மிகையாகாது.மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

தற்போது இவர் பிரபுதேவா உடன் பொய்க்கால் குதிரை படத்தில் நடித்துள்ளார்.இப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வரலட்சுமி சரத்குமார் வானத்தை போல படத்தில் பிரபுதேவா பேசிய எமோஷனல் ஆன வசனம் ஒன்றை அவரை வைத்து பேசி ரீல்ஸ் செய்துள்ளார்.இதில் பிரபுதேவாவுக்கே சிரிப்பு தாங்க முடியவில்லை.தற்போது இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் சூப்பர் என கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in