The Indian Times

புலி படம் பார்த்துட்டு நீங்க தானே என்னை வீட்டுக்கு அனுப்புனீங்க…கிச்சா சுதீப் பேட்டி

கன்னட சினிமா நடிகர் கிச்சா சுதீப்.தமிழில் வில்லனாகவும் கன்னடத்தில் ஹீரோவாகவும் நடித்து அசத்தி வரும் நடிகர் ஆவார்.இவர் 1997 ஆம் ஆண்டு தயவ்வா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவுக்குள் நுழைந்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல கன்னட படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார்.கதாநாயகன் வில்லன் என மாறி மாறி வெற்றிப்படங்களை கன்னட சினிமாவில் கொடுத்துள்ளார்.மேலும் தயாரிப்பாளராகவும் உருவாகி பல படங்களை தயாரித்துள்ளார்.இவர் தமிழில் முதல் முறையாக அறிமுகமாகிய படம் நான் ஈ திரைப்படம்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று கொடுத்தது.ஆனால் பின்னர் தமிழ் சினிமாவில் இவருக்கு பட வாய்ப்பு சரியாக அமையவில்லை இதனால் மீண்டும் கனடா சினிமாவுக்கே சென்று தொடர்ந்து நடிக்க தொடங்கிவிட்டார்.சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியாகிய புலி படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.இப்படம் சரியான வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.தற்போது கிச்சா சுதீப் கதாநாயகனாக விக்ராந்த் ரோனா எனும் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் தமிழிலும் வெளியாக உள்ளது.

Advertisement

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தற்போது கிச்சா கலந்துகொண்டுள்ளார்.இந்த பேட்டியில் பத்திரிகையாளர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார் கிச்சா.இதில் அவர் கூறியதாவது,பல இயக்குனர்கள் என்னிடம் உங்களை வைத்து படம் பண்ண வேண்டும் என கூறியிருக்கிறார்கள்,பின்னர் நான் ஈ படம் பார்த்துவிட்டு நீங்கள் வில்லனா அல்லது ஹீரோவா உங்களை வைத்து எந்த படம் இயக்குவது என்பது தெரியவில்லை என்று கூறினார்கள்,மேலும் வில்லனாக நிறைய கதையை எடுத்து வந்தார்கள் ,எனக்கு வில்லனாக நடிப்பதில் பிரச்சனை இல்லை,நான் ஈ படத்தில் வில்லன் என்றால் அந்த கதைக்கு சரியாக தேவைப்பட்டது,பின்னர் மீண்டும் வில்லனாக புலியில் நடித்தேன்,நீங்க தானே என்னை வீட்டுக்கு அனுப்பியது என நகைச்சுவையாக பேசியுள்ளார்,அதனால் வில்லனாக நடிப்பதில்லை எப்போ தேவையோ அப்போ நடிப்பேன் வில்லனாக என தெரிவித்துள்ளார்

Embed video credits : shruti tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in