The Indian Times

கல்யாணம் ஆகாமல் காதலனுடன் புது வீட்டிற்கு குடிபோகும் நடிகை ப்ரியா பவானி சங்கர்

செய்தி வாசிப்பாளராக சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் ப்ரியா,பின்னர் அங்கிருந்து நாடகத்தில் வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து நாடகத்தில் நடிக்க தொடங்கினார்.இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ஆனது எங்கும் கிடைக்கவில்லை,இதற்கான சரியான நேரத்தினை நோக்கி காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.இதன்மூலம் ப்ரியா அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார்.பல இளைஞர்கள் மனதினையும் கொள்ளையடித்தார் ப்ரியா.

Advertisement

பிரபலமாகியதை தொடர்ந்து பட வாய்ப்புகள் பிரியாவிற்கு தொடர்ச்சியாக வர தொடங்கியது,அதன்படி மேயாத மான் என்ற படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக நடித்து சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படம் இவருக்கு பெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.இப்படத்தினை தொடர்ந்து தொடர்ச்சியாக படம் நடிக்க தொடங்கினார்.இவரது கதாபாத்திரத்திற்கு படங்களில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய ஓ மணப்பெண்ணே திரைப்படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது.

Advertisement

தற்போது இவர் தனது காதலருடன் புதிய வீட்டுக்கு குடியேற இருப்பதாக அறிவித்துள்ளார்.இது இவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.இவரது ரசிகர்கள் சிலர் கல்யாணம் ஆகாமல் காதலனுடன் புது வீட்டுக்கு குடியேறப்போறோம்னு சொல்லுறீங்களே இது தப்பு இல்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.இருப்பினும் சில அது அவர்களின் இஷ்டம் என கூறி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in