வெளியாகிய கன நேரத்தில் லட்சங்களில் பார்வையாளர்களை பெற்ற வாரிசு ட்ரைலர்.. எத்தனை லட்சம் தெரியுமா?

தளபதி விஜய் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி நடிகர்.இவர் நடிக்கும் படங்கள் கோடிகளில் வசூல் சாதனை புரிந்து வருகிறது.இதனாலேயே இவரை வைத்து படம் இயக்க இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காத்துக்கிடக்கின்றனர்.தற்போது விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.தில் ராஜு இப்படத்தினை தயாரித்துள்ளார் ,தமன் இசையமைத்துள்ளார்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஆவலாக காத்து இருக்கின்றனர்.

வெளியாகிய கன நேரத்தில் லட்சங்களில் பார்வையாளர்களை பெற்ற வாரிசு ட்ரைலர்.. எத்தனை லட்சம் தெரியுமா? 1

விளம்பரம்

நேற்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது.லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இசைவெளியீட்டு விழாவை கண்டு களித்தனர்.மேலும் படம் குறித்து நிறைய தகவல்களை படக்குழு அறிவித்துள்ளது,பின்னர் பேசிய தளபதி விஜய் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது அதிலும் குறிப்பாக அவர் இந்த முறை கூறிய குட்டி ஸ்டோரி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் நிகழ்ச்சியில் தளபதி விஜய் எடுத்த செல்பி பெரும் அளவு வைரலாகியது

வெளியாகிய கன நேரத்தில் லட்சங்களில் பார்வையாளர்களை பெற்ற வாரிசு ட்ரைலர்.. எத்தனை லட்சம் தெரியுமா? 2

விளம்பரம்

இன்று மாலை வாரிசு படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.விஜயின் ஒவ்வொரு படத்தின் ட்ரைலரும் வெளியாகும் பொழுது பெரும் சாதனை படைப்பது சகஜம்.அதுபோல வாரிசு படமும் சாதனைகளை அள்ளிக்குவித்துள்ளது.வெளியாகிய 20 நிமிடங்களில் சுமார் 30 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது மேலும் 90 நிமிடங்களில் 10 லட்சம் லைக்குகளை பெற்று பெரும் வெற்றியை குவித்துள்ளது.துணிவுக்கு சரியான போட்டியை வாரிசு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment