The Indian Times

போட்றா வெடியை… துணிவு RELEASE தேதியை அறிவித்த படக்குழு

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.அந்த அளவிற்கு அஜித்குமார் மீது இவரது ரசிகர்கள் அளவுகடந்த அன்பு மற்றும் பாசத்தினையும் வைத்துள்ளனர்.இதற்கு முழுக்க காரணம் அஜித்,ஏனென்றால்,முதலில் உன் குடும்பத்தினை பார்த்துக்கொள் அடுத்து வந்து என் படத்தினை பார் என்று ரசிகர்களுக்கு அவர் அன்பாக கூறும் அறிவுரையே அஜித் பின்னால் இத்தகைய கூட்டத்தினை கூட்டியுள்ளது.

Advertisement

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் குடும்பத்தினரும் இப்படத்தினை பெரிதளவு கொண்டாடினர்.வலிமை படத்தின் வெற்றிக்குப்பிறகு தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு துணிவு என படக்குழு பெயரிட்டுள்ளது.கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார்,ஜிப்ரான் இசையமைத்துள்ளார் ,போனி கபூர் இப்படத்தினையும் தயாரித்துள்ளார்

Advertisement

இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படம் விஜயின் வாரிசு படத்துடன் நேருக்கு நேர் மோத உள்ளது.இதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.தற்போது துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.துணிவு வருகிற 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது உள்ளது.இந்நிலையில் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in