The Indian Times

BEAST வசூல் சாதனை செய்தது;உதயநிதி ஸ்டாலின் அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியாகிய படம் பீஸ்ட்.சன் பிக்சர் தயாரித்துள்ள இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் வெளியிட்டுள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.இயக்குனர் செல்வராகவன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

பீஸ்ட் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது.இப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு மக்களிடம் இருந்து கிடைக்கவில்லை.திரும்பும் இடமெல்லாம் பீஸ்ட்டுக்கு எதிரான நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே கிடைத்தது.இதனால் படத்தின் வசூல் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டதாக பல தரப்பில் இருந்தும் செய்திகள் வெளியாகி கொண்டிருந்தது.இதுவரை சன் பிக்சர் நிறுவனமும் பீஸ்ட் வசூல் குறித்து எந்த வித அறிவிப்பும் வெளியிடவில்லை,இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர்.

Advertisement

இந்நிலையில் படத்தினை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் பீஸ்ட் வசூல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.இதற்கு பதில் அளித்த அவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய பீஸ்ட் படம் நல்ல வசூல் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்,இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

Embed video credits : Thanthi Tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in