The Indian Times

அவன் ஜெயிச்சிட்டான்-Don படத்தின் இயக்குனர் சிபி தாய் நெகிழ்ச்சி பேட்டி:

இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சிபி சக்கரவர்த்தி.பின்னர் தனது கடின உழைப்பால் தொழிலை கற்றுக்கொண்டு அட்லீ உதவியுடன் நடிகர் சிவகார்த்திகேயனிடம் டான் படத்தின் கதையை கூறி அதை ஓகே செய்தார்.படத்தினை சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.அனிருத் இசையமைத்துள்ளார்.மாபெரும் எதிர்பார்ப்புடன் படம் இன்று திரையரங்கில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

அதிகாலை நான்கு மணி முதல் மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று படத்தினை கண்டு வருகின்றனர்.நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழு காலை நான்கு மணி காட்சிகளை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்தனர்.தமிழகத்தில் பல திரையரங்குகளில் ஜலபுல ஜங் பாடல் இரண்டு முறை ஒளிபரப்பப்பட்டு வருகிறது.இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில் இன்று படத்தினை காண வந்த படத்தின் இயக்குனர் சிபி அவர்களின் அம்மா அளித்த பேட்டியில் கூறியதாவது,அவன் ஜெயிச்சிட்டான்,ஸ்கூல் ,கல்லூரியில் மிகப்பெரிய டான் ஆக தான் அவன் இருப்பான் நான் அத விட பெரியா டான்-அ இங்க பார்த்தேன் என மகிழ்ச்சியில் நெகிழ்ச்சியாக மகனின் வெற்றிக்குறித்து பேட்டியளித்துள்ளார்.

Embed video credits: galatta

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in