The Indian Times

என்ன ANDREA கூச்சப்படுறீங்க…வாங்க FUN பண்ணுவோம் … ANDREA உடன் FUN பண்ணும் தொகுப்பாளினி DD

தொகுப்பாளினியாக சின்னத்திரையை கலக்கி வருபவர் திவ்யா தர்ஷினி.நடிகைகளுக்கு இணையாக இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் பேராதரவினை பெற்றவர் திவ்யா தர்ஷினி .தொகுப்பாளர் வேலையே பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறார்.ஆரம்பத்தில் இருப்பது போல் தொடர்ந்து நிகழ்ச்சியில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் கிடைக்கும் வாய்ப்புகளில் புகுந்து விளையாடி வருகிறார்.அண்மையில் உலக நாயகன் நடித்த விக்ரம் படத்தின் இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சியினை டிடி சிறப்பாக தொகுத்து வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தற்போது சுந்தர் சி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.இவர் அவ்வப்பொழுது சினி உலகிற்கு இடைவெளி விட்டு இருந்தாலும் இவர் எப்போ வந்தாலும் இவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர் ரசிகர்கள்.தொகுப்பாளர்களுக்கும் அதிக ரசிகர்கள் உண்டு என்பதை நிரூபித்தவர் இவர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் , காபி வித் டிடி என அனைத்து நிகழ்ச்சிகளும் சூப்பர் டூப்பர் ஹிட்.தனது எதார்த்தமான பேச்சினாலும்,குழந்தை போன்ற செயலினாலும் மக்களை கவர்ந்துள்ளார்.சிறந்த தொகுப்பாளர் என்ற விருதினை இவருக்கு விகடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.விஜய் தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் நட்சத்திர தொகுப்பாளராக இருந்தவர் இவர்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது மேலும் பல சினிமா படங்களிலும் இவர் நடித்துள்ளார்.சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலுமே தனது கால் தடத்தினை பதிவிட்டு ஒரு கலக்கு கலக்கி வருகிறார் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி.

Advertisement

தற்போது இவர் நடிகை மற்றும் பாடகியான ஆண்ட்ரியா உடன் யுவன் சங்கர் ராஜா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.இந்த நிகழ்ச்சியின் பொழுது நடிகை ஆண்ட்ரியாவின் மடியில் படுத்துக்கொண்டு லூட்டி அடித்துள்ளார்.இந்த வீடியோவை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் மேலும் மேடையில் ஆண்ட்ரியாவுடன் சேர்ந்து பாடல் பாடியும் டிடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது டிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் டிடி செய்யும் குறும்பு சேட்டைகள் அனைவரையும் ரசிக்க செய்யும் விதமாக அமைந்துள்ளது.தற்போது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in