வெறித்தனமாக சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் விக்ரம்…சென்னையில் மட்டும் இத்தனை கோடியா?

நீண்ட இடைவெளிக்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடித்து இருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி,பகத் பாசில்,நரேன் ,காளிதாஸ் ஜெயராம் என பலரும் நடித்துள்ளனர்.ரெட் ஜெயண்ட் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தினை தமிழகத்தில் வெளியிட்டுள்ளார் .இப்படம் கடந்த ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது.பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது விக்ரம்.படத்தினை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கூறுவது ஒன்றே ஒன்று தான் தமிழ் சினிமா மீண்டும் உயர்ந்துவிட்டது.காரணம் சமீப காலமாக வெளியாகிய பெரிய நட்சத்திரங்களின் படங்கள் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை ,தூங்கிய தமிழ் சினிமாவை உலகநாயகன் தூக்கி நிறுத்திவிட்டார் என்று கூறி வருகின்றனர் ரசிகர்கள்

கட்டாயம் படிக்கவும்  காந்தாரா படத்தின் கதாநாயகன் ரிஷப் ஷெட்டி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

வெறித்தனமாக சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் விக்ரம்...சென்னையில் மட்டும் இத்தனை கோடியா? 1

விளம்பரம்

அனிருத் இசையில் உருவாகிய பாடல்கள் பெரும் ஹிட் அடித்துள்ளது.பின்னணி இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது என்றே கூறலாம்.கமல் எழுதி பாடிய பத்தலை பத்தலை பாடல் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.திரையரங்கில் ரசிகர்களை இப்பாடல் குத்தாட்டம் போட வைத்துள்ளது.அந்த அளவிற்கு பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.படம் வெளியாகி நல்ல வசூலை உலகம் முழுவதும் பெற்று வருவதால் மகிழ்ச்சியில் கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு புதிய கார் ஒன்றினை பரிசாக அளித்துள்ளார் மேலும் அவரது 13 துணை இயக்குனர்களுக்கும் பைக்குகளை வழங்கியுள்ளார்.நடிகர் சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்சினை அன்பளிப்பாக அளித்துள்ளார் கமல்ஹாசன்.

கட்டாயம் படிக்கவும்  தோழிகளுடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

வெறித்தனமாக சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் விக்ரம்...சென்னையில் மட்டும் இத்தனை கோடியா? 2

விளம்பரம்

படம் வெளியாகி உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.வெளியாகி 9 நாட்கள் ஆகிய நிலையில் உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேல் வசூல் பெற்று உள்ளது மேலும் தொடர்ந்து வசூலையும் குவித்து வருகிறது.தமிழகத்தில் மட்டும் 100கோடி ரூபாயை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பாக சென்னையில் மட்டும் 10.5 கோடி ரூபாய் வரை கலெக்ஷனை குவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

கட்டாயம் படிக்கவும்  மகளின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்

வெறித்தனமாக சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் விக்ரம்...சென்னையில் மட்டும் இத்தனை கோடியா? 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment