The Indian Times

I LOVE YOU என கூறிய தொகுப்பாளர்..போடா என திட்டிய நடிகை கல்யாணி..வைரலாகும் வீடியோ

நடிகை கல்யாணி பிரியதர்ஷினி இயக்குனர் பிரியதர்சன் மற்றும் மலையாள நடிகை லிஸ்சியின் மகள் ஆவார்.வெளிநாட்டில் படித்து வந்த இவர் நடிப்பின் மேல் கொண்ட காதலால் நடிக்க வேண்டும் என கூறி புதுச்சேரியில் உள்ள நடிப்புத் தொழிற்துறை பயிற்சியில் பயின்றார்.இவர் சினிமாவில் தனது வாழ்க்கையை முதலில் கலை வடிவமைப்பாளராக தான் தொடங்கினார்.பாலிவுட் திரைப்படங்களுக்கு சாபு சிரிலுக்கு துணை தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார் கல்யாணி.பெரிய இயக்குனர் மகள் என்றாலும் பட வாய்ப்பினை எளிதாக பெற்றுக்கொள்ளாமல் கடின போராட்டங்களுக்கு பிறகும் ,தேடலுக்கு பிறகும் படங்களில் நடிக்க தொடங்கினார் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பல போராட்டங்களுக்கு பிறகு தெலுங்கு படத்தில் வாய்ப்பு கிடைத்தது.அதன்படி 2017 ஆம் ஆண்டு வெளியாகிய ஹலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்குள் நுழைந்தார்.இதனை தொடர்ந்து 2 தெலுங்கு படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.தமிழ் படத்தில் களம் இறங்க சரியான கதைக்காக காத்துக்கொண்டிருந்த கல்யாணிக்கு சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை பயன்படுத்திக்கொண்டு இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய ஹீரோ படத்தில் இவருக்கு கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.இப்படத்தில் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்புவின் மாநாடு படத்தில் அவருக்கு ஹீரோயின் ஆக நடித்திருந்தார்.தற்போது மலையாளத்திலும் தொடர்ச்சியாக படங்கள் நடித்து வருகிறார்.

Advertisement

அண்மையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மகன் ப்ரணாவ் மோகன்லால் நடிப்பில் வெளியாகிய படம் ஹ்ரித்யம் ,இயக்குனர் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கிய இப்படத்தில் கல்யாணி கதாநாயகியாக நடித்து அசத்தினார்.இப்படத்தில் கதாநாயகன் ஐ லவ் யூ என்று கூற அதற்கு இவர் போடா என கூறுவார் அந்த வசனம் ஒன்று பெருமளவு வரவேற்பினை பெற்றது .அதன்படி அண்மையில் இவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளர் அந்த வசனத்தினை பேசும்படி கூறவே அதற்கு ஓகே என கூறிய நடிகை கல்யாணி,தொகுப்பாளர் ஐ லவ் யூ என கூற போடா என கூறி அந்த வசனத்தினை அழகாக பேசியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Embed video credits : Galatta tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in