மேடையில் Surprise கொடுத்த அக்காவை கண்டு கதறி அழுத எஸ் ஜே சூர்யா….

முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர் ஆக தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் எஸ் ஜே சூர்யா,கதாநாயகனாகவும் சரி கதையின் வில்லன் ஆகவும் சரி எந்த பாத்திரம் கொடுத்தாலும் கனகச்சிதமாக செய்து முடிப்பவர் இவர்.1999 ஆம் ஆண்டு வெளியாகிய வாலி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.முதல் படமே மாபெரும் வெற்றி.தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் எஸ் ஜே சூர்யா.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த வருடமே தளபதி விஜயை வைத்து குஷி படத்தினை இயக்கினார்.இப்படமும் தாறுமாறாக ஹிட் அடித்து முன்னணி இயக்குனராக உருமாறினார்.தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் படங்கள் இயக்கியுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த் மற்றும் அதிதிக்கு விருந்து கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசன்

மேடையில் Surprise கொடுத்த அக்காவை கண்டு கதறி அழுத எஸ் ஜே சூர்யா.... 1

விளம்பரம்

இயக்குனருக்கு தற்போது ஓய்வை கொடுத்து சினிமாவில் நடிப்பதில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார் இவர்.1988 ஆம் ஆண்டு வெளியாகிய நெத்தியடி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார்.தற்போது சினிமாவையே தனது நடிப்பு திறமையால் கலக்கு கலக்கி வருகிறார்.இறைவி தொடங்கி டான் வரை எஸ் ஜே சூர்யா நடிப்பு காண்பவர்களை நெகிழ செய்துள்ளது.தற்போது கடமையை செய்,பொம்மை என அடுத்தடுத்து கைவசம் படங்களை வைத்துள்ளார் எஸ் ஜே சூர்யா.

கட்டாயம் படிக்கவும்  கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

மேடையில் Surprise கொடுத்த அக்காவை கண்டு கதறி அழுத எஸ் ஜே சூர்யா.... 2

விளம்பரம்

அண்மையில் கலந்துகொண்டு விருது வழங்கும் நிகழ்ச்சியொன்றில் அவரது அக்கா செல்வி மற்றும் அவரது கணவர் இருவரும் எஸ் ஜே சூர்யாவிற்கு தெரியாமல் அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக என்ட்ரி கொடுத்துள்ளனர்.அக்காவை கண்டு மகிழ்ச்சி அடைந்த எஸ் ஜே சூர்யா பேச முடியாமல் நின்றார்.தம்பியை குறித்து பெருமையாக அக்கா செல்வி மேடையில் பேசியுள்ளார்.அக்காவை கண்டு மேடையிலேயே எஸ் ஜே சூர்யா கண்ணீர் விட்டு அழுதுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.எவ்வளவு பாசம் அக்கா மேல் சூப்பர் சார் என இவரது ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடிய தமிழ் சினிமா நட்சத்திரங்கள்

விளம்பரம்

Embed video credits : Galatta tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment