The Indian Times

தாத்தா செந்திலை போல நடித்து காண்பிக்கும் பேத்தி..வைரலாகும் வீடியோ

1980 மற்றும் 90களில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் செந்தில்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது வரை இவரது காமெடியை ரசித்து வருகின்றனர்.இவர் கவுண்டமணியுடன் இணைந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.சிறுவயதிலேயே படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் வாய்ப்பு தேடி அலைந்த இவருக்கு இறுதியாக வாய்ப்பு கிடைத்தது 1979 ஆம் ஆண்டு வெளியாகிய ஒரு கோயில் இரு தீபங்கள் என்ற படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதனை தொடர்ந்து தமிழில் தொடர்ச்சியாக படங்கள் நடிக்க தொடங்கினார்.கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணியின் கூட்டணியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து கவுண்டமணியுடன் பயணம் செய்ய தொடங்கினார்.இவர்கள் இல்லாத படமே இல்லை என்ற அளவிற்கு தமிழ் சினிமா மாறிவிட்டது.அந்த அளவிற்கு வெற்றி படங்களை கொடுக்க தொடங்கிவிட்டனர்.பல படங்கள் இவர்களின் காமெடியாலேயே ஜெயித்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.இருவரின் கூட்டணியில் வெளியாகிய காமெடிக்கு இன்றும் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தற்போது வயது காரணமாக நடிகர் செந்தில் படங்களில் நடிப்பதில்லை,அவ்வப்பொழுது மட்டும் கிடைக்கும் சிறு கதாபாத்திரங்களை செய்து வருகிறார்.தற்போது இவரின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் தனது பேத்தி மிருதியுடன் ரீல்ஸ் செய்துள்ளார்.தாத்தாவின் வசனத்தினை அப்படியே பேசி நடித்துள்ளார் இவரது பேத்தி.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் தாத்தாவை போலவே அச்சு அசல் நடிக்கிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in